வெயில் நல்லது ஏன் ?

0
D1

வெயில் நல்லது ஏன் ?

கோடைகாலமே வருக ! அனல் இல்லா வெயிலை தருக !
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சூரிய ஒளியின் மூலம் வெளியாகும் புற ஊதாகதிர்களால், தோல் புற்றுநோய் மற்றும் முதிர்வு தோற்றம் உண்டாகும் என்ற தவறான கருத்துகள் நிலவி வருகிறது. ஆனால் அது முற்றிலும் உண்மையானது அல்ல.


இயற்கை அளித்த முதல் மருத்துவர் சூரியனே. சூரியனிலிருந்து பெறப்படும் வெளிச்சமும், வெப்பமும் உடல் நலத்திற்கு நன்மை தரும்.
சூரியனிலிருந்து பெறப்படும் மிக முக்கியமாக வைட்டமின் “D” உடல் ஆரோக்யத்திற்கும், எலும்பின் வலிமைக்கும் ஆதாரம் ஆகும். வெப்ப மண்டல நாடான இந்தியாவில் மட்டும் சுமார் 65-70% மக்கள் வைட்டமின் “D” குறைபாட்டினால் பாதிப்பு அடைந்துள்ளார்கள். மேலும் 15% பற்றாக்குறையுடன் உள்ளனர். வைட்டமின் “D” எலும்பு வலிமைக்கும், கால்சியம் வளர்சிதை மாற்றத்திற்கு முக்கியமாகும். எலும்பு மஜ்ஜையில் இருந்து நமக்கு தேவையான அனைத்து நோய் எதிர்ப்பு அணுக்கள் ! இரத்த வெள்ளை / சிகப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றது.

D2
N2


வைட்டமின் “D” யின் பயன்கள்

• நோய் எதிர்ப்பு சக்தி திறன் அதிகமாகும்,
• இரத்தக் கொதிப்பை குறைக்கும்
• தசைகள் வலுவாகும்
• தூக்கம் சீராகும் (மெலடோனின் அளவு அதிகரிப்பதால்)
• மனசோர்வு குறையும்.
• மூளையின் செயல்திறன் அதிகமாகும்.
• கண்பார்வை திறன் வலுப்பெறும்.
கோடை காலத்தின் பயன்கள்
• வியர்வை அதிகரிப்பதால் உடல் கழிவுகள் வெளியேறும். உடலின் வெப்பநிலை சீராகும்.
• எடை குறைப்பதற்கு ஏற்ற காலம்.
• முகப்பரு, வெண்புள்ளிகள், சொரியாஸிஸ் போன்ற நோய்களை சரிப்படுத்தும்.
• இரத்த நாளங்கள், தொடர்பான பிரச்சனைகள் (Dvt, Thrombosis, Embolism) தவிர்க்கும்.
• கோடைகாலங்களில் நீர்சத்து அதிகம் தேவை நீர் சத்து குறைபாட்டினால் SUN STROKE ஏற்படும் வாய்ப்பு அதிகம்

இந்தியாவின் தட்ப வெப்பநிலைப்படி தினமும் 10-30 நிமிடம் சூரிய வெளிச்சம் நம்மீது பட வேண்டும். குறிப்பாக காலை 11 முதல் 1 மணி வரை சிறந்தது.
சால்மன் மீன்கள், பால் சார்ந்த உணவுகள், இறைச்சி, முட்டை மஞ்சள் கரு, காளான் வகைகள், ஆரஞ்சு, சோயா, முலாம் பழம், பப்பாளி, பரோகோலி, அவகடோ போன்ற உணவு பொருட்களில் வைட்டமின் “D” / கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

 

Dr. A.அபிராமி கார்த்திகேயன்
B.H.M.S., DFN., Regd No: `A’ – 2566
Homeopathic Consultant

N3

Leave A Reply

Your email address will not be published.