ஸ்ரீரங்கத்தில் மும்பை குல்பி

0
1

கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று இளைப்பாற நாம் அனைவரும் குளிர்பான கடைகளை தேடி அலைகிறோம். வெயிலில் சுற்றி திரிந்து விட்டு ஏதாவது குளிர்பானங்களை குடித்தால்தான் நாம் அனைவருக்கும் ஒரு புது உற்சாகம் ஏற்படுகிறது. குளிர்பானங்களை குடித்தால் கூட களைப்பு நீங்காது ஆனால் மும்பை குல்பியை சாப்பிட்டால் புது தெம்பும் மனதிற்கு ஒரு குதூகலமும் கிடைக்கிறது. இத்தகைய சிறப்பு மிக்க மும்பை குல்பி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளது.

குல்பி என்று நினைத்தாலே நமது நாவில் ஒரு சுவை நம்மை அறியாமலேயே பிறக்கும். இந்த வகை குல்பி கோடைக்கு ஏற்றவாறு குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் தன்னகத்தே ஈர்த்து கொள்ளும். குல்பி சாப்பிட சாப்பிட போதும் என்ற மனமே நமக்கு வராது. இச்சுவை நாவில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். மென்மேலும் சாப்பிடுவதற்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும்.


சென்னைக்கு சென்றிருந்த போது கனிமொழி என்பவர் இந்த குல்பி வகைகளை சுவை பார்த்து அதில் மெய்மறந்து இதே போல் திருச்சி ரங்கம் பஸ் நிலையம் அருகில் ஒன்றை ஆரம்பித்து மக்களுக்கு நல்ல தரமான சுவையான ஆரோக்கியம் நிறைந்த குல்பி வகைகளை தர வேண்டும் என்ற முனைப்போடு மட்டுமின்றி திருமணத்திற்கு பின் வீட்டிலேயே முடங்கி விட கூடாது என்று எண்ணத்தில் நாமும் ஏதாவது செய்து திருச்சி ஸ்ரீரங்கம் மக்களை குளிர்விக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பிப்ரவரி 24 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு தொடங்கியதுதான் மும்பை குல்பி ,

2


குல்பி வகைகள் மற்றும் சிறப்பம்சங்கள்…

இதில் மலாய் குல்பி என்ற வகை மக்கள் மிக விரும்பி சாப்பிட கூடியதாகும். இவ்வகை குல்பிகளில் எந்த வித செயற்கை உணவு வகைகளும் சேர்ப்பதில்லை.

திருமதி கனிமொழி

மாறாக பழ சுவை மற்றும் பாதாம், பிஸ்தா, முந்திரி சுவைகளை இயற்கையான முறையில் தயாரித்து தருவதே இம்மலாய் குல்பிகளின் சிறப்பம்சமாகும். பால், பாதாம், பழங்கள் கொண்டு பல வெரைட்டிகளில் தயாரிக்கப்படுகின்றது. மேலும் டூட்டி ப்ரூட்டி, மிக்ஸ் ப்ரூட்ஸ் குல்பி, குல்கந்து குல்பி, பிஸ்தா குல்பி, சிலைஸ், மேங்கோ குல்பி சிலைஸ் போன்ற பல குல்பி வகைகள் மக்களிடையே மிக அதிக வரவேற்பை பெற்று அமோகமாக விற்பனையாகிறது. இக்குல்பி வகைகளின் சிறந்த சுவை, நிறைந்த தரம், மற்றும் குறைவான விலை போன்றவைகள் வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் வாங்க தூண்டுகிறது என்கிறார் இக்கடையின் உரிமையாளர் கனிமொழி.

 

சிறப்பான டோர் டெலிவரி…

குல்பி வகைகளை வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப நல்ல முறையில் டோர் டெலிவரியும் செய்து தரப்படுகிறது. மும்பை குல்பிகள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்படுகின்றன. இந்த மும்பை குல்பி என்ற பெயரை கேட்டாலே அதனை எப்போது சாப்பிடுவோம் என்று மனதில் ஆவலாக உள்ளது. உடனடியாக திருச்சி ஸ்ரீரங்கம் குல்பி கடைக்கு சென்று சுவைக்க வேண்டும் என்று நம் மனது அலைபாய்கிறது.

3

Leave A Reply

Your email address will not be published.