பணத்தை ஈர்க்கும் சக்தி மழை பெய்ய வைக்கும் சக்தி – Jc. Dr.ஸ்டார் ஆனந்த்ராம்

0

ஆனந்த வணக்கம்… அன்பு அன்பர்களே!

எந்த எண்ணத்தை தொடர்ந்து நினைப்போம் அந்த எண்ணம் படியே நம் வாழ்க்கையில் அனைத்துமே நடைபெறும் அதுபோல் சமீபத்தில் நான் ஒரு பதிவில் அனைத்து மக்களுக்கு முன்னாடிய ஒரு பதிவை பதிவிட்டேன் மழையை நம் எண்ணத்தின் மூலமாக வர வைக்க முடியும் நல்ல எண்ணங்களை ஒன்றிணைத்து நம் செயல்படுத்தினால் நம் எண்ணம் போலவே வாழ்வு அமையும் என்று அதைப் பற்றிய ஒரு பதிவை தான் இன்று நான் உங்களிடம் பதிவிடுகின்றேன் மழையை வர வைக்க கூடிய சக்தி ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயமாக உண்டு

“மழை பெய்ய வைக்கும் சக்தி…” ஒவ்வொருவருக்கும் உண்டு – மழையே இல்லை…! என்று யாரும் சங்கடப்படாதீர்கள் மழை பெய்ய வேண்டும் என்று விண்ணிலே நினைவைச் செலுத்துங்கள் – மழை பெய்யும்…!
பயிர்கள் கொஞ்சம் வாடினால் போதும். விவசாயிகளும் சரி.. மக்களும் சரி.., உடனே என்ன நினைக்கின்றார்கள்…!
இங்கே மழையே இல்லை…! வெள்ளாமை சுத்தமாகப் போய்விட்டது…! என்ன ஆகப் போகிறதோ…? என்று எல்லோரும் வேதனைப்படுகின்றனர். ஊரில் உள்ள மனிதர்கள் எல்லோரும் இந்த உணர்வின் தன்மை வெளிப்படுத்தும் போது என்ன ஆகும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

‌சந்தா 1

நீர்… தாவரங்கள்… எல்லாவற்றிலும் மனிதனுடைய (நம்முடைய) உணர்வுகள் கலந்துள்ளது. மழை நீரின் தன்மை பட்டுத் தான் தாவர இனங்கள் விளைகின்றது. அந்தத் தாவரங்களில் விளைவதை உணவாக உட்கொள்ளும் உணர்வு கொண்ட மனிதர்கள் நாம்

1.வேதனை கலந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் போது
2.இந்த எதிர் நிலையான நிலைகள் வந்த பின்
3.உருவாகும் மழை மேகங்களைக் கலைக்கும் சக்தியே அதற்கு உண்டு.
ஒரு ஊரிலே அல்லது கிராமத்தில் “அங்கு உள்ளவர்கள் கலவரம் செய்கின்றார்கள்…” என்று வைத்துக் கொள்வோம். அத்தகைய கலவர உணர்வுகள் அதிகமானால் அந்த வருடம் அந்த இடங்களில் நல்ல மழை இருக்காது.

மனிதனிடம் இருந்து சங்கடமும் வேதனையும் கோபமும் கொதிப்பும் கொண்ட உணர்வலைகள் பரவினால் மழை மேகங்களை அது கலைத்துவிடும். ஏனென்றால் மனிதனின் எண்ண உணர்வுகளுக்கு “அவ்வளவு பெரிய சக்தி உண்டு…!”
விவசாயம் செய்பவர்கள் போன வருடம் விளையாமல் போய் நஷ்டமாகி விட்டது…! இந்த வருடம் என்ன ஆகுமோ…? என்று இந்த உணர்வின் தன்மையைக் கொண்டு வந்தால் அந்த எண்ணத்திற்கொப்பத்தான் தான் அங்கே விளைச்சலாகும்.

சங்கடமாக இருக்கப்படும் போது நீங்கள் ஒரு கணக்கை எடுத்துப் பாருங்கள். கணக்கு தப்புத் தப்பாக வரும்.
சங்கடமான உணர்வை எடுக்கும் போது நமக்குள் இருக்கும் காந்த சக்தியால் (மேக்னட்) அந்தச் சங்கட உணர்வுகள் விதைகள் மீது பட்டுவிடுகின்றது. நிலங்களில் அத்தகைய விதைகளை விதைக்கும் பொழுது நாம் எண்ணியபடி அதைச் சரியாக முளைக்காதபடி தடைபடுத்திவிடும். ஆனால் மழை இல்லை என்றால் அன்றைய காலங்களில் வாழ்ந்த மக்கள் என்ன செய்தார்கள்…?

1.ஊரில் உள்ள எல்லோரும் ஒன்றுபட்ட நிலையில்
2.வருண பகவானை… நாங்கள் அழைத்து வரப் போகின்றோம்…! என்ற நிலையில்
3.கீழே இருந்து பானைகளில் தண்ணீரைச் சுமந்து கொண்டு மலைப்பகுதிக்குச் சென்று
3.அந்த மலையில் உள்ள ஒரு தேவதைக்கோ (சிலைக்கு) மரத்திற்கோ செடிக்கோ கொண்டு சென்ற நீரை ஊற்றி…
4.உடனே எங்களுக்கு “நல்ல மழை பெய்ய வேண்டும்” என்று வேண்டுவார்கள்.
தண்ணீரை ஊற்றி விட்டுத் திரும்பி வரும் போது பார்த்தால் “மழை துரத்திக் கொண்டே வரும்…!”

 

சந்தா 2

1.மழை இல்லையே…! என்ற குறையை நீக்கி விட்டு
2.மழை பெய்ய வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் வலு கொண்டு செயல்படுத்தும் போது
3.அங்கே மழையைக் கொண்டு வருகின்ற சக்தி அந்தக் காலத்தில் இருந்தது.
அதைப் போல நமக்குள் இருக்கும் சங்கடத்தையும் வேதனையையும் நீக்கி விட்டு நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற “ஏக்க உணர்வு கொண்டு” விண்ணிலே உங்கள் உணர்வுகளைச் செலுத்திப் பாருங்கள்.
அதே மகிழ்ச்சியான உணர்வுகள் கொண்டு நீங்கள் விதைக்கும் வித்துக்கள் நல்ல முறையில் முளைக்கும் என்ற உணர்வுடன் விதைத்துப் பாருங்கள்.

 

1.அருள் உணர்வுகள் அதிலே படர வேண்டும் என்று
2.மகரிஷிகள் உணர்வை எடுத்து இந்த வலுவைச் சேர்த்து கொண்டு
3.வித்துகள் அனைத்தும் சீராக முளைக்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
4.உங்கள் பயிரினம் வாடாதபடி செழித்து வளரும்… நல்ல மகசூலும் கிடைக்கும்.

 

ஏனென்றால் இத்தகைய உணர்வின் ஆற்றல் நமக்கு உண்டு. அதன் உணர்வின் அணுக்களும் நமக்குள் உண்டு.
செய்து பாருங்கள்…!
மழையை எவ்வாறு ஈர்க்க வேண்டும் என்பதை உங்களுக்காக பகிர்ந்துகொண்டேன் அது போலவே உங்கள் வாழ்வில் என்ன விஷயம் நடந்து கொண்டிருக்கிறதோ, தெரிந்தோ தெரியாமலோ அதையும் நீங்கள் ஈர்க்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அது மட்டுமல்ல நம் வாழ்வில் வரக்கூடிய பிரச்சனைகளுக்கு சிக்கல்களுக்கு வெற்றிகளுக்கு தோல்விகளுக்கு என அனைத்துக்குமே காரணம் நம் எண்ணங்கள் தான். நமது எண்ணத்தை நாம் சரியாக சீரமைத்து வைத்துக் கொண்டோம் என்றால் நம் வாழ்வு வளம் பெறுவது நிச்சயம்.

 

அதைத்தான் நான் பணவளக்கலை என்ற பயிற்சியின் மூலமாக உலகெங்கிலும் நடத்தி வருகின்றேன் உங்கள் வாழ்வின் வெற்றியை ஈர்ப்பதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்பதைத்தான் நான் பயிற்சி வகுப்பாக சித்தர்களின் வாழ்க்கை முறையில் ஆன்மீகமும் அறிவியலும் இணைத்து பயிற்சி வகுப்பு வருகின்றேன்.
அந்த பயிற்சி வகுப்பில் பணத்தின் மீது எவ்வாறு எண்ணத்தை வைக்க வேண்டும் அந்த எண்ணத்தை வைத்து பணத்தை எவ்வாறு இருக்க வேண்டும் அதன் மூலமாக கடன் பிரச்சினை பணப்பிரச்சினை தொழில் பிரச்சினையை எவ்வாறு தீர்க்க வேண்டும் என்ற ரகசியங்களை தான் நான் பல நபர்களுக்கு சொல்லித்தந்து உருவாக்கித் தந்திருக்கிறேன்.

 

உங்கள் வாழ்விலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்றால் பணம் கலையை கற்றுக் கொள்ளுங்கள் மேலும் விவரங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.
எண்ணம் போல் வாழ்வு, எண்ணம் போல் வெற்றி அமைய வாருங்கள்…

 

நீங்கள் விரும்பும் செல்வத்தை அடைய வேண்டுமா?
நீங்கள் குறிவைத்துள்ள சாதனைகளை அடைந்திட வேண்டுமா?
உங்கள் கனவு வாழ்க்கை வாழ்ந்திட வேண்டுமா?

 

இந்த கேள்விகளுக்கு வாழ்வியல் வெற்றி வழிகாட்டிதான் இந்த புத்தகம் பணக்காரர்கள், பணக்காரர்களாகத்தான் விரும்புவார்கள். ஏனென்றால் அது அவர்களின் தவறல்ல. பணம் பணத்தைத்தான் விரும்பும். அப்படியானால் நீங்களும் பணத்தை விரும்ப ஆரம்பித்தால்? பதிலுக்கு பணமும் உங்களை விரும்ப ஆரம்பிக்கும். பணம் மீதான விருப்பமும் பணம் மீதான அதீத ஆர்வமும், பணம் மீதான அளவுக்கு அதிகமான அன்பும், பணம் மீதான மிரட்டலான காதலும் பதிலுக்கு உங்களை பணத்தின் அருகே கொண்டு சென்று விடும்.

 

படிப்படியாக அல்ல, ஒரேயடியாக, அலேக்காக உங்களை மிகுந்த பணத்தின் அருகே தூக்கி கொண்டு போய் வைத்து விடும். அதனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வேட்கையை,
ஆர்வத்தை, உழைப்பை விட பணத்தின் மீதான உண்மையான விருப்பத்தை முதலில்
உங்கள் மனதில் விதையுங்கள், அதை தினமும் பணத்தின் மீதான ஆசை என்ற தண்ணீர் ஊற்றி வளர்த்து வாருங்கள், வளர்வீர்கள் பெரிதாக, வாழ்க பணத்துடன்…

 

Jc. Dr.ஸ்டார் ஆனந்த்ராம்

Leave A Reply

Your email address will not be published.