சன் கிளாஸ் ஏன் அணிய வேண்டும்?

0
Business trichy

சன் கிளாஸ் இந்த வெயிலுக்கு ஏன் அணிய வேண்டும்?
பொதுவாக சன் கிளாஸ் ஸ்டைலுக்கு, சீனுக்குனு செல்லிதான் அணியிறாங்க ஆனா உ்ண்மை அது இல்லிங்க, சன் கிளாஸ் அணிவதன் நோக்கம் கண்ணுல படக்கூடிய UV-Rays அதாவது சூரியனிலிருந்து வெளிவரக்கூடிய புறஊதாக்கதிர்களை கட்டுப்படுத்துவதற்கும் கண்களை பாதுகாப்பதும் தான் முதல் நோக்கம். அதன் பிறகு வாகனம் ஓட்டும் போது தூசுபடாமலிருக்கவும் வெயிலின் அனல் நம் கண்களை பாதிக்காமல் இருப்பதற்காகவும் கண்களில் உள்ள ஈரப்பதம் வற்றாமலிருக்க சன்கிளாஸ் பயன்படுத்தப்படுகிறது. இந்த கோடையில் நாம் வெளியில் செல்லும் முன்பு எவ்வாறு காலனி (செருப்பு) அணிகின்றோமோ அதுபோல் நம் கண்களை பாதுகாக்க சன் கிளாஸ் அணிவது மிக அவசியமாகும்.
Kavi furniture
MDMK
என்னென்ன வகையான சன் கிளாஸ் இருக்கு? அவற்றை எப்படி அணியவேண்டும்?
சன் கிளாஸில் முன்று வகையுள்ளது. முதலில் சாதாரண சன் கிளாஸ் இந்த வகை வண்ணமிடப்பட்ட கிளாஸ். வாகனம் ஓட்டும் போது தூசுபடாமலிருக்கவும் வெயிலின் அனல் நம் கண்களை பாதிக்காமல் இருப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது, இந்தவகை கண்ணாடிகள் மிகவும் குறைந்த விலைக்கே கிடைக்கின்றன.

இரண்டாவதாக வண்ணமிடப்பட்ட கிளாஸிசிலேயே UV சன் கிளாஸ் என்று உள்ளது. இந்த சன் கிளாஸ்கள் சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊததாக்கதிர்களை தடுத்து உங்கள் கண்கள் தெளிவாக பார்ப்பதற்கு உதவுகிறது. இதனால் நீங்கள் சாலைகளில் செல்லும் போது உங்கள் கண்கள் சேர்வடையா செய்யாமல் பார்வையை தெளிவாக பார்க்க உதவுது. இந்த வகை சன் கிளாஸ்கள் சாதாரண சன் கிளாஸ்களை விட சற்று விலை கூடுதல்.

மூன்றாவதாக போலோரைஸ்ட் (Polarized) சன் கிளாஸ் என்று உள்ளது. இவ்வகை சன் கிளாஸ் புறஊததாக்கதிர்களை மட்டுமல்ல நெடுச்சாலை பயணங்களில் காணப்படும் கானல் நீர் மற்றும் வெயில்பட்டு வரும் தேவையற்ற ஒளிகளை நீக்கி கண் கூச்ச மற்ற பார்வையை தருகிறது. இந்த போலோரைஸ்ட் (Polarized) சன் கிளாஸ் சுற்றுலா செல்லும் போது அணிந்து சென்றால் இயற்கையின் அழகை அற்புதமாக ரசிக்க உதவுகிறது.
கோடை கால சிறப்பு சலுகையாக ரூ. 2000 மேல் மதிப்புள்ள சன்கிளாஸ் வாங்கினால் ஒரு போலோரைஸ்ட் (Polarized) சன் கிளாஸ் இலவசமாக கிடைக்கும். பவர் கண்ணாடிகள் வாங்குபவர்களுக்கு ஒரு சன்கிளாஸ் இலவசமாக கிடைக்கும். நேரில் வந்து இச் சலுகைகளை பயன் அடையுங்கள்
சன் கிளாஸ் அணிவதால் என்ன பயன்?
சன் கிளாஸ் அணிவதால் கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வெளிவரக்கூடிய அதிகமான UV-Rays புறஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து தடுக்கிறது. உலக அளவில் சன் கிளாஸ் அணிபவர்கள் வெளி நாட்டவர்கள் தான் அதிகம் அவர்கள் சிறுவயது முதல் வீட்டை விட்டு வெளியில் வந்தாலே சன் கிளாஸ் அணிந்து தான் வருகின்றனர். ஆகையால் அவர்களுக்கு கேட்ராக்ட் (விழித்திரை பழுது அடைததல்) எனப்படும் கண் புறை நோய்யானது, 70 வயது மேல் உள்ள மக்களுக்கு தான் வருகிறது. ஆனால் இந்திய மக்கள் அவ்வாறு அணிவதில்லை ஆகையால் கேட்ராக்ட் எனப்படும் கண் புறை நோய்யானது 40 வயதிலேயோ அதிகம் வருகிறது. அதுமட்டுமல்ல இளம் வயதினருக்கு கண்களில் சதை வளர்தல், பார்வை குறைபாடுகள் அதிகம் காணப்படுகிறது. ஆகவே சன் கிளாஸ் தொடருந்து அணிபவர்களுக்கு 60 வயதிற்கு மேல் தான் விழித்திரை பழுது அடைய வாய்ப்பு உள்ளது.
உங்களது கடையில் என்னென்ன வகை சன்கிளாஸ்கள் உள்ளது? வாடிக்கையாளர்களுக்கு என்ன விலையில் விற்பனை செய்யப்படுகிறது?

திருச்சி தில்லைநகர் 9 வது குறுக்கு தெருவில் உள்ள Eye Link Opticals – ல் கோடை வெயிலுக்கு தேவையான அனைத்து வகையான சன்கிளாஸ்களும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ரூ.200 முதல் ரூ.20000 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் மேலும் சிறப்பு அம்சம் என்னவென்றால் கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் அவர் அவர்களது பவர்களுக்கு தகுந்தார் போல் சன்கிளாஸ்கள் சிறந்த முறையில் வடிவமைத்து தரப்படுகிறது.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.