காவு கேட்கும் திருச்சி மாநகராட்சி !

0
1 full

மக்களை பலி கேட்கும் திருச்சி மாநகராட்சி.

திருச்சியில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்து வருகிறது. பெருமளவு மழையாக இல்லாமல் இருந்தாலும் ஒரு சில இடங்களில் மற்றும் சாலைகள் ரொம்பவும் மோசமான நிலையில் இருந்து வந்தது.

அந்த வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் காஞ்சனா பிளாசா, ரம்யாஸ் ஹோட்டல் சாலை போன்றவைகள் எண்ணெய் கழிவுகள் நிரம்பிய சாலையாக காணப்பட்டிருந்தது பார்ப்போரை அதிர்ச்சியில் உள்ளாகியது. நேரம் செல்ல செல்ல பொதுமக்கள் பைக்குகளில் செல்லும்போது ஒன்றன்பின் ஒன்றாக விழத்தொடங்கினார், அதில் ஒரு பச்சிளம் குழந்தையும், தாயும் கூட விபத்துக்குள்ளாகினர். அன்றைய தினம் மட்டும் அப்பகுதியில் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக 20 பேர் வாகனத்தில் வந்து விபத்துக்குள்ளாயிலுள்ளனர் என்பது அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியது.

2 full

இதுத் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஒருவர் நம்மிடம் கூறியபோது கடந்த 5 நாட்களாக திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு கால் செய்து புகார் அளித்தும், கால்களை எடுத்து பேசும் அதிகாரிகள் அனைவரும் இதோ, அதோ என்று கூறினார்கள்லொழிய கடைசிவரை எந்த ஒரு அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து ஆய்வு ஏதும் மேற்கொள்ளவில்லை என்றார்.

இதுதொடர்பாக பொதுமக்கள் நமக்கு அளித்த புகாரின் பேரில், நாம் 22/04/19 அன்று மாநகராட்சி அலுவலகத்திற்கு புகார் அளிப்பது போல மக்கள் சேவக எண்ணிற்கு அழைத்து சார் வணக்கம், நான் கண்டோன்ட்மெண்ட் பகுதியிலிருந்து பேசுறேன் சார், இந்த ரம்யாஸ் ஹோட்டல் கிட்ட, மழை பெய்ஞ்தனால வண்டில வரவங்கலாம் விழுறங்க, ரோடெல்லாம் ஒரே எண்ணெயா கிடக்குது சார், என்று கூறினோம். அதற்கு நம்மிடம் பேசிய அதிகாரி ஆமா சார், இதுத்தொடர்பா கம்ப்லையின்ட் நிறையா வந்துருக்கு, நீங்க ஒண்ணு பண்ணுங்க நான் ஒரு நம்பர் தரேன் அதுக்கு வீடியோ எடுத்து அனுப்புங்க என்றார், அதற்கு நாம் யாரோட நம்பர் சார் என்று கேட்தற்கு கார்ப்பரேஷன் கமிஷனரோட வாட்சப் நம்பர் சார் என்றார். அதற்கு அப்புறம் அவரே நான் அந்த பகுதி ஜே இ நம்பர் தரேன் அவருக்கிட்ட பேசுங்க, ஆனா அவருக்கிட்ட நான் தான் நம்பர் கொடுத்தேனு சொல்லிடாதீங்க சார் என்றார். இதுதொடர்பாக ஜே இ- யிடம் கால் செய்து பேசியபோது, அவர் எனக்கும் அந்த பகுதிக்கும் சம்பந்தமில்ல, யாரு உங்களுக்கு என்னோட நம்பர் கொடுத்தா என்று கேட்டார். அதற்கு நாம், எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் கொடுத்தார் என்று சொன்னோம். அதற்கு அவர் இந்த பிரச்சனைக்கு நீங்க போலீஸிட சொல்லுங்க அவங்க நடவடிக்கை எடுப்பாங்கனு ஒரு அரை குறையான பதிலை கூறி விட்டு வைத்தார் அந்த ஜே இ.

மக்களுக்கு சேவை செய்வதற்காக இருப்பவர்களே அரசு அதிகாரிகள் ஆனால் இதுபோன்ற அதிகாரிகள் பொறுப்பு அற்று தனது கடமையினை முறையாக செய்ய தவறுவதால் இவர்களால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

திருச்சி மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தில் முதல் 3 இடத்திலிருந்து 39- வது இடத்திற்கு சென்றதற்கு காரணம் இதுப்போன்ற அதிகாரிகளினாலே என உண்மையை வெளிப்படுத்தும் விதமாக அவர்களின் நடவடிக்கைகளின் மூலம் தெரியவருகிறது.

3 half

Leave A Reply

Your email address will not be published.