புதியதோர் உலகம் செய்வோம்

0
Business trichy

“எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே”

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்

Kavi furniture

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

இந்த வரிகள் எல்லாம் நினைவிருக்கிறதா! ஆம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வரிகள் தான்.

MDMK

தனது ஆரம்பக்கல்வியை பிரெஞ்சு மொழியில் பயின்ற போதும், தமிழ் மேல் கொண்ட ஈர்ப்பால் தமிழைக்கற்று தமிழாசிரியராய் பணியாற்றினார்.

தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் “எங்கெங்குக் காணினும் சக்தியடா” என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே ஶ்ரீசுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கிய இவர், பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பெற்று ” புரட்சிக்கவி ” என்ற பட்டத்தை பெற்றார்.

இவர் எழுதிய பிசிராந்தையார் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

பல படைப்புகள், பாடல்கள், திரைக்கதை, திரைப்பாடல்கள் எல்லாவற்றிலும் தனது தனித்தன்மையை நிலைநாட்டியவர் அவரது நினைவு தினம் இன்று

Pranav city

Leave A Reply

Your email address will not be published.