திருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்

0
Business trichy

உடல் நலம் காக்க.. உழவர் நலம் காக்க வருங்கால தலைமுறையை காக்க.. தமிழ் மரபு இயற்கை உணவுப்பொருளை மீட்கும் முழக்கத்துடன் தமிழகப் பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரண் மாணவர்கள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு தொடர் ஓட்டம் இன்று 21-4-2019, ஞாயிற்றுக் கிழமை காலை 6.30 மணிக்கு திருச்சி உழவர் சந்தை அருகில் உள்ள தென்னூர் மாநகராட்சி அரங்கில் தொடங்கியது.

இத்தொடர் ஓட்டம் தமிழரண் மாணவர்கள் மற்றும் தமிழகப் பெண்கள் செயற்கள ஒருங்கிணைப்பாளர் தலைமையில்.. தமிழரண் மாணவர்கள் தாமரை, இரவி, விசயகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தமிழரண் மாணவர்கள் அமைப்பின் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் விஜயகுமார் வரவேற்பு நிகழ்த்த, அய்யப்பன் நன்றியுரை வழங்க, கவிதா, அபி தொடர் ஓட்டத்தைப் பற்றி விளக்கி பேசினார். மேலும் லோகேசுவரி, சங்கரி உள்ளிட்ட ஏராளமான உறுப்பினர்கள் பங்கேற்று சிறப்புற ஒருங்கிணைத்தனர்.

இத்தொடர் ஓட்டத்தை மயிலை ப. வேலுமணி அவர்கள் வாழ்த்தி தொடங்கி வைக்க.. ஏறக்குறைய 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பட்டாபிராம் சாலை வழியாக 4 கி.மீ. கடந்து மீண்டும் தென்னூர் மாநகராட்சி அரங்கிற்கே வந்தடைந்தனர்.

Kavi furniture
MDMK

அதன் தொடர்ச்சியாக சித்த மருத்துவர் ஐயா காசி பிச்சை, பெல் நிருவன முத்தமிழ் மன்றத்தின் பொது செயலாளர் ஐயா அந்தோனி, நாளை விடியும் இதழ் ஆசிரியர் அரசெழிலன் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசளித்து வாழ்த்துரையாற்றினர்.ஜம்போ கிட்ஸ், கிங் தொலைக்காட்சி நிருபர் கண்ணுசாமி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

இறுதியில் சரஸ்வதி கபே உணவகம் சார்பில் மரபுசார் பயிர், கேழ்வரகு அடை, சுக்கு நீரும்.. உழவர் தங்கசாமி சார்பில் நீராகாரமும் வழங்கப்பட்டது.

வருகைத் தந்த மாணவர்கள், இளைஞர்கள், பெரியோர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உணர்வுடன் பங்கேற்றதோடு.. அவர்களும் உறுதுணையாக நிற்பதாக உறுதியளித்துள்ளனர்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.