திருச்சியில் தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது.

0
D1

திருச்சியில் தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது.

N2

குடிபோதையில் தாயை தாக்கிய தந்தையை கத்தியால் குத்திய மகனை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி காஜாபேட்டை, கீழகிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் (45). காந்தி மார்க்கெட்டில் சுமை தொழியான இவருக்கு குடிபழக்கம் இருந்துவந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு குடிபோதையில் வந்தவர் மனைவி ரெங்கம்மாளை தாக்கி துன்புறுத்தியுள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த அவரது மகன் மோகனசுந்தரம் (25), தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தந்தை நாகராஜின் வயிற்றில் குத்தியுள்ளார்.
இதில், படுகாயமடைந்த நாகராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து பாலக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து மோகனசுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.