பேச்சுக்கலை

0
D1

தற்காலத்தில் மக்கள் எல்லோரும் நான் நல்லதை செய்கிறேன் சொல்கிறேன் ஆனால் பிறர் என்னை அவ்வாறு ஏற்றுக்கொள்வதில்லை என்று சொல்லக்கேட்கிறோம்.(மனக்கவலையுடனும் மன ஆதங்கத்துடனும்)

ஏன் இந்த நிலை என்று ஆராய்ந்து பார்த்தேன் எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வந்தது.

 

ஒரு நாட்டு ராஜா தன் சோதிடரை அழைத்தார். என் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணித்து கூறுங்கள் என்றார். ஜோதிடர் மன்னா! உங்கள் உறவினர்கள் அனைவரும் இறந்துவிடுவர் நீங்கள் அனைவருக்கும் கருமம் செய்துவிட்டு பின்தான் இறப்பீர்கள் என்றார்.

D2

உடனே ராஜா அவரை சிறையில் போடும்படி உத்தரவிட்டார். ஏனெனில் அவருக்கு உறவினர்கள் மீது கொள்ளைப்பிரியம். அதனால் அவர் (ஜோதிடர்) கூறியதை அவர் ஏற்கவில்லை.

ஆனால் சிறிது நேரத்திற்குள் மற்றொரு ஜோதிடர் அழைத்து வரப்பட்டார். அவர் மன்னனின் கைகளை பார்த்துவிட்டு, மன்னா! உங்களுக்கு ஆயுள் அதிகம். உங்கள் உறவினர்களை விட நீங்கள் அதிக நாள் தீர்க்க ஆயுளுடன் இருப்பீர்கள். என்றார். அவருக்கு மன்னன் சன்மானம் வழங்கி சிறப்பித்தார். ஏன்?

சொல்ல வேண்டிய விஷயத்தை உணர்ச்சிப்பிழம்பாக இருக்கும் எதிராளிகளிடம் எப்படி சொல்ல வேண்டும் என்று தீர்மானித்து பேச வேண்டும்.

உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து. சென்சிட்டிவான விஷயத்தில் அழுத்தம் தந்து பேசக்கூடாது, நெகடிவ்வான விஷயத்தை முன் நிறுத்தி பாசிட்டிவ்வான விஷயத்தை பின்னுக்குத்தள்ளி பிரச்னையை பெரிது படுத்தக் கூடாது.

N2

உணர்ச்சியை தூண்டும் விஷயத்தை மென்மையாக்கி, பாசிடிவ் விஷயத்தை முதலில் சொன்னதோடு, நெகடிவ் விஷயத்தை நாசூக்காக சொன்னால் பாராட்டு கிடைக்கும்.

நான் ரொம்ப வெளிப்படையானவன், எதையும் நேரடியாகச் சொல்லி விடுவேன் என்பார்கள். நேரடியாக பேசுவதில் தவறில்லை. ஆனால் நீங்கள் என்ன ரிசல்ட்டை எதிர்பார்க்கிறீர்கள்…அதனால் என்ன தாக்கம் எழும்.. அதில் என்ன விளைவை ஏற்படுத்த முனைகிறீர்கள் என்பது தான் இங்கே முக்கியம். உங்கள் பேச்சின் மூலம் ஒரு சூழலை உங்களுக்கு எதிராகவும் மாற்றிக் கொள்ள முடியும்… சாதகமாகவும் ஆக்கிக் கொள்ள முடியும்.

மற்றவர்களுக்கு முரணாகச் சொல்லக்கூடாது என்றால், உண்மைக்கு மாறாகப் பேச வேண்டுமென்பதில்லை. உண்மைகள் அறம் சார்ந்து சொல்லப்பட வேண்டும்தான். ஆனால் மற்றவர்களை சங்கடப் படுத்தாமல், எந்த பாதிப்பையும் பிறருக்கு ஏற்படுத்தாமல் எப்படிச் சொல்லப்பட வேண்டும் என்பதைத்தான் கவனிக்க வேண்டும்.

சொல்வதை திருந்தச் சொல் என்று முன்னோர் சொல்லியதும் இதைத்தான்.எதிராளியின் கருத்தை எதிர்க்காமலும் அதே சமயம் மாற்றாக நீங்கள் சொல்ல விரும்புவதை நயம்பட, உரைப்பதும்தான் சிறந்த பேச்சு. இடம், பொருள், ஏவல் கருதி அதற்கேற்றாற்போல் எதையும் யோசித்துப் பேசுங்கள்.

பிறர் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைவிட, மற்றவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதுதான் முக்கியம்.

நீங்கள் சொல்லும்  விஷயத்தை விட அதை எந்த தொனியில் சொல்கிறீர்கள் என்பதில்தான் நீங்கள் மற்றவருக்குத் தரும் மரியாதை உணரப்படுகிறது. பொதுவாக, நமக்கு நெருக்கமான உறவுகள், நட்புகளிடம் மிக சாதாரணமாக எந்த ஒரு ஆர்வமும் காட்டாத தொனியில்தான் பேசுவதை இயல்பான பேச்சாவே நினைக்கிறோம். அதில் தவறில்லை. ஆனால், பொறுமையில்லாமலும், அன்பு, பாசம் இல்லாமலும், அதிகாரமாகவோ அலட்சியமாகவோ தொனிப்பதை எப்படி இயல்பான விஷயமாகச் சொல்ல முடியும்? அப்படி  ஒருவர் உங்களோடு பேசினால் அதை நீங்கள் ஏற்பீர்களா என்பதை யோசித்துப் பாருங்கள். உங்களிடம் மற்றவர்கள் எப்படிப் பேச வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அப்படி அக்கறையாக அனுசரணையாக மற்றவர்களுடன் நீங்கள் பேசிப்பாருங்கள்.

அன்பு, பாசம், நேசம் எல்லாம் உங்கள் ஒவ்வொரு பேச்சிலும் செய்கையிலும் தொனிக்க வேண்டியதில்லை என்று நீங்களாகவே நினைத்துக் கொண்டு உங்கள் இயல்பை மீறி விடுகிறீர்கள். உண்மையில் எது உங்கள் இயல்பாக இருந்தால் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி தரும் என்பதை சற்றே யோசித்து அப்படி இருந்து பாருங்கள்! பரஸ்பர மகிழ்ச்சி அங்கே பெருகும்.

 

N3

Leave A Reply

Your email address will not be published.