இலக்கியத்தை இப்படியும் நேசிக்கலாம்.

0
gif 1

இலக்கியத்தை இப்படியும் நேசிக்கலாம்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றத்திற்கும் உய்யக்கொண்டான் கால்வாய்க்கும் இடையே உள்ள சாலையில் மேம்பாலத்தைக் கடந்து சென்றால்; இடது புற ஓரமாக ‘The Critics Poetry cafe’ உள்ளது. உள்ளே சென்றால், கதிரியக்க மருத்துவ நிபுணராக உள்ள ஒருவரால் இலக்கியத்தை இப்படி, எப்படி நேசிக்க முடிகிறது என்ற ஆச்சரியம் மேலிடுகிறது.

மருத்துவர் ராஜராஜன் சமூக அக்கறையுள்ள ஒரு சிறந்த கவிஞர். தீவிர கள செயற்பாட்டாளர். இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போதெல்லாம் நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றியவர். தன்னையும் தனது பணிகளையும் வெளிக்காட்டிக் கொள்ளாதவர். தமிழ்நாடு அறிந்த மூத்த வழக்கறிஞர் செ.வீரபாண்டியவர் அவர்களுடைய மகன். ஆனால் அவர் தன்னை இன்னாருடைய மகன் என்று அறிவித்துக் கொள்வதில்லை. தனது செயல்களையும் தனது எழுத்தையும் மட்டுமே நம்புபவர்.

gif 3

‘The Critics’ என்ற பெயரில் அவர் தமிழிலும் அங்கிலத்திலும் கவிதைகளை எழுதி வருகிறார். ‘LIFE IS BLESS AND LOVE IS BLISS’ என்ற அவருயை ஆங்கலக் கவிதை நூலை பென்குயின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்தக் கவிதைத் தொகுப்பில், கரு முதல் காதல் வரை உள்ள பல்வேறு படிநிலைகளை தமிழ் சமூகத்தின் ஊடாக உலக அரங்கில் பதிவு செய்திருக்கிறார்.

திருச்சியில் நடைபெற்ற அந்த நூலின் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ அவர்கள் ராஜராஜனின் கவிதை வரிகள் கலீல் ஜீப்ரான் கவிதைகளுக்கு இணையானவை என்று புகழாரம் சூட்டினார்.

வைகோ அவர்களின் புகழாரத்திற்கு வலுச் சேர்க்கம் வகையில் அவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு கடந்த ஆண்டு வெளிவந்திருக்கிறது. ‘I AM A WOMAN, and I AM AN INDIAN’ என்ற கவிதைத் தொகுப்பை ‘நோசன் பதிப்பகம்’ வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, குறிப்பாக தந்தை பெரியாரின் கண்ணாடி வழியாக, இன்றைய பெண்கள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களை மிகவும் நுட்பமாக அந்தத் தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார்.

gif 4

அந்தக் கவிதைத் தொகுப்பில் மருத்துவர் ராஜராஜன் எழுப்பும் கேள்விகள் நீதி மறுக்கப்பட்ட பெண்களின் இதயக்குரலாக எல்லாப் பக்கங்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மீ டூ என்றால் என்ன என்றே தமிழகம் அறிந்திராத காலக் கட்டத்தில், மீ டூ பற்றியும் அந்தத் தொகுப்பில் பேசப்பட்டிருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது.

தொழில் ரீதியாக ஒரு மருத்துவராக இருந்தாலும் ஒவ்வொரு நொடியும் இந்த சமூகத்தைப் பற்றியே சிந்திக்கும் ஒருவரை இன்றைக்கு சந்திப்பது என்பது மிகவும் அரிதாகும். ஆனாலும் வரலாறு எப்போதுமே சில விசித்திரங்களை படைத்துக் கொண்டுதான் இருக்கும். அப்படி ஒரு விசித்திரம்தான் மருத்துவர் ராஜராஜன்.

ஒரு நூலகத்தோடு சிற்றுண்டி நிலையத்தை நடத்த அவர் எடுத்திருக்கும் முயற்சி என்பது தமிழ் இலக்கிய உலகில் காணக்கிடைக்காத ஒன்றாகும். நேர்த்தியாக அடுக்கப்பட்ட புத்தக அலமாரிகள், காட்சிப்படுத்தப்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில கவிதைகள், மர இருக்கைகள், தண்ணீர் குவளைகள் என ஒவ்வொன்றும் ரசித்து ரசித்து செய்திருக்கிறார்.

இன்றைய அவசர உலகில் செல்போனில் தன்னை இழந்து திரியும் ஒரு கூட்டத்தை புத்தகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். சுவையான காபி, சிற்றுண்டி என புத்தகத்தோடு சில நிமிடங்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் அவசியம் சென்று வரவேண்டிய இடம்.

தமிழ் இலக்கிய உலகம் கொண்டாட வேண்டிய மகத்தான மனிதன் மருத்துவர் ராஜராஜன்.

The_Critics_Poetry_cafe

gif 2

Leave A Reply

Your email address will not be published.