ஓட்டு போட மறுத்த திருச்சி சிறை கைதிகள்

0
Business trichy

ஓட்டு போட மறுத்த திருச்சி சிறை கைதிகள்

இன்றைய தலைமுறையினர் தான் இன்றை அரசியல்வாதிகள் மீது வெறுப்புணர்வு ஏற்பட்டு நோட்டோவிற்கு வாக்களித்தோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்கள். ஆனால் திருச்சி சிறையில் உள்ள கைதிகள் சிலர் நாங்கள் வாக்களிக்க விரும்பவில்லை என்று சொல்லியிருப்பது அதிகாரிகள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kavi furniture
MDMK

திருச்சி மத்திய சிறையில், வாக்களிக்கத் தகுதியான 8 கைதிகளும் தங்களுக்கு வாக்களிக்க விருப்பமில்லை என கூறி வாக்களிக்க மறுத்து விட்டனர்.

 

திருச்சி மத்திய சிறையில் ஆயுள்தண்டனை கைதிகள் 348 பேர், பிற தண்டனைக் கைதிகள் 192 பேர், விசாரணைக் கைதிகள் 606 பேர், தடுப்புக்காவல் தண்டனைக் கைதிகள் 109 பேர் என மொத்தம் 1,255 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் வழக்குகள் நிலுவையில்லாத நிலையில் உள்ள தண்டனைக் கைதிகளில் 8 பேர் மட்டும் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் என கூறப்படுகிறது.

 

அவர்கள் 8 பேரிடமும் வாக்களிக்கும் விருப்பம் குறித்து சிறைத்துறையினர் கேட்டபோது, 8 பேருமே வாக்களிக்க விருப்பமில்லை எனக்கூறி எழுதி (வேலட்பேப்பரில்) ஒப்பமிட்டதாக  கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்கள் வாக்களிக்கவில்லை என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.