நானும் கடைசில அவுட்கோயிங் ஸ்டுடெண்ட் ஆகிட்டேன்ல…

0
1

டிப்பார்ட்மெண்ட் லைப்ரரி போய் சார் எனக்கு ஒரு புக் வேணும் சார்னு கேட்டேன். தம்பி அவுட்கோயிங் ஸ்டுடெண்ட்ஸ் லாம் புக் தரது இல்லை பா அப்படின்னு சொன்னாறு. இந்த வார்த்தையை கேட்டதும் தான் எனக்கு நானும் இந்த வருஷம் வெளிய போற பையன்ங்கிறது நியாபகம் வருது.

மூணு வருஷம் மூணே நாள் மாதிரி போயிடுச்சு. ஒருத்தனையும் தெரியாம வந்த அந்த முதல் நாள்,ஒருத்தனையும் பிரிய முடியாம வெளிய போற இந்த கடைசி நாள்.
இது ரெண்டுக்கும் இடையில எவ்வளவோ சந்தோசமான தருணங்கள்,கூடவே சோகங்களும், சின்னபுள்ளை சண்டை அப்படி இப்படி னு ஆயிரம் ஆயிரம் நினைவுகளை அள்ளித்தந்த அருமையான நாட்கள் இந்த கல்லூரி நாட்கள்.

என்னடா காலேஜ் இது,பள்ளிக்கூடமா நடத்துறாங்க அப்படினு ஆயிரம் முறை திட்டினாலும் அதை விட ஆயிரம் மடங்கு மச்சான் நம்ம காலேஜ் எவ்வளவோ பரவாயில்லை டா அப்படி பேசி மெச்சிகிட்டதும் உண்டு.கூட்டமா கேன்டீன்ல போய் மொக்கை போட்டது,பர்ஸ்ட் பீரியட் லேட்டா போறது,பிரீ அவர் விட்டதும் கத்திக்கிட்டே கெளம்புறது,பங்சன்ல போடுற ஆட்டம்,குரூப்பா சட்டை போடுறது,டீ,பிஸ்கட்,குஸ்கா,சிக்கன் கிரேவி இதெல்லாம் இனி நடக்கப்போறது இல்லை வெறும் நினைவுகளா மட்டும் தான் இருக்கும்னு நினைக்கும் போதே கண்ணு ரெண்டும் கண்ணீருள மிதக்குது.

2

ஏண்டா கோ-எட் வைக்கலானு கொதிச்சதும் உண்டு , கோ-எட் இல்லாதது தான் மச்சான் நல்லா இருக்குனு கொண்டாடுனதும் உண்டு.
கடைசி பெஞ்ச் தூக்கம்,கத்தியா அறுக்குற வாத்தியார்,கண்டது களாய்க்குற நண்பர் கூட்டம்,தேனாய் தமிழ் பேசி திட்டுறது. லேப்ல செய்ய வேண்டியத செய்யாம கண்டது எடுத்து கலக்கிறது,வித்தியாசமான கலர் வந்தா மச்சான் டேய் னு சந்தோசமா காட்டுறது, போட்டோ எடுத்து போஸ்ட் போடுறது.
இதெல்லாம் இனி நடக்குமோ நடக்காதோ. என்னைக்கோ ஒரு நாள் எதர்த்தமா பாக்கும் போது வாழ்க்கைய பேசி ஐந்து நிமிடம் முடிஞ்சு வரேன் டா மச்சான் நேரம் ஆச்சுனு கெளம்பிடுவோம்.

இந்த 25 வருஷம் கழிச்சு ரீ யூனியன் லாம் படத்துல மட்டும் தான் நடக்கும்,இனி மொத்தமா எல்லாரும் ஒரே இடத்துல சேறுறதுலாம் கனவுல கூட நடக்க வாய்ப்பு இல்லை.
கடைசி நாள் குரூப் போட்டோ எடுப்போம்னு சொன்னாலே ஒரு குரூப் ஓரமா வீட்டுக்கு கெளம்பிடும் இதுல எங்க இருந்து ரீயூனின்லாம் நடக்கிறது. அப்படி ஒருவேளை நடந்தா அதை விட ஆனந்தம் என்னவா இருக்க முடியும்.

ஆக்டிவ் அஹ் இருந்த வாட்சப் குரூப் இனி கடைசில காத்து வாங்கும்.காரணமே இல்லாம கத்திக்கிட்டு கிடந்த பயலுகலாம் வாழ்க்கை பாதையிலே பக்கத்துல வரவன பாக்க நேரம் இல்லாம ஓடிட்டு இருப்பான். என்னதான் பள்ளிக்கூட வாழ்க்கை தான் சந்தோசம்னு மெச்சிக்கிட்டு இருந்தாலும் கல்லூரி வாழ்க்கை, வாழ்க்கை கடல்ல ஒரு கலங்கரை விளக்கம் அதை மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.

-சண்முக நாதன்

3

Leave A Reply

Your email address will not be published.