திருச்சி அரசு பெரியமருத்துவமனையில் விபரீதமாக மாறும் விளம்பரப் பலகை.

0
Business trichy

திருச்சி அரசு பெரியமருத்துவமனையில் விபரீதமாக மாறும் விளம்பரப் பலகை.

திருச்சி புத்தூரில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. மருத்துவமனையின் நுழைவாயில் இடதுபுறம் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மாநில நலவாழ்வு குழுமத்தின் ஜனனி சிசு சுரக்க்ஷா கார்யாக்ரம் திட்டம் குறித்து பத்து சலுகைகளை விளம்பரப் பலகையாக வைத்துள்ளார்கள்.

Rashinee album

அவ்விளம்பரப் பலகை புயல் வந்த பொழுது பெரும் காற்றினால் சாய்ந்தது. அந்நாளில் இருந்து இரும்பிலான விளம்பரப் பலகை சாய்ந்து இருக்கின்றது. அதற்கடியில் பொதுமக்கள் அமர்வதும் நடப்பதும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதும் தொடர்கிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன் விளம்பர பலகையை அகற்ற வேண்டுமென அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Image

செய்தி- வெற்றிச்செல்வன்

Ukr

Leave A Reply

Your email address will not be published.