தர்மம் தலைகாக்கும் ! நாலணா கொடுங்க…..

0
D1

நாளுக்கு நாள் திசைகள் அனைத்திலும் நொடிக்கு நொடி ஒவ்வொன்றிலும் மாற்றம் நிகழ்ந்து கொண்டும் தான் இருக்கும் இந்த உலகில்.ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஆட்சியும் மாறியது.இடையே ஆட்சிகளைப்பும் ஆட்சி அதிகாரமாற்றமும் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது என மாறி மாறி பேசிக்கொண்டிருக்கும் இந்த மனிதர்களிடையே மாறாதது, பேருந்து நிலையங்களிலும்,போது இடங்களிடம் இரத்தல்(பிட்சை எடுத்தல்) மட்டும் இன்றளவும் ஏதோ பாரம்பரியம் போல் தொன்றுதொட்டு நிற்கிறது.இவர்களைப்போலவே ஏனோ இந்த ஆட்சியாளர்களும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறைமட்டும் வந்து வாக்குபிட்சை கேட்டு கொடுத்த பிறகு ஏனோ நம்மை கொலையில் விட்டு விடுகிறார்கள்.

அவர்கள் குடும்பங்கள் சிறக்க நம் மண்ணை கூறுபோட்டு அவன் பண்ணாட்டு பங்காளிக்கு பரிசாக கொடுக்கிறான்.இதில் ஊரே அழிந்தாலும் அலட்டுவதில்லை.காற்றில் காசை வீசி அதிகாரிகளையும் அடிமையாக்குகிறார்கள் இந்த அரசியல்வாதிகள். அவர்கள் செயல்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கத்தவர்களை மிரட்டி வழிக்குக்கொண்டுவர முயல்கின்றனர்.அதற்கும் அடிபணியாதவனை பணி மாற்றம் செய்து இவன் மாமனையோ மச்சானையோ உட்கார வைத்து நம் வாயில் இறுதிப்பால் ஊற்றத் தொடங்குகிறான்.

இவனுக்கு இறுதி நாள் இன்றாய் இராதா என ஒவ்வொருநாளும் நம்மை ஏங்க வைக்கிறான்,இந்த அரசியல் மிருகம்.அம்மா நாலணா கொடுங்க என நம்மிடம் பிட்சை கேட்கும் பிச்சைக்காரன் கூட நம்மிடம் விசுவாசம் காட்டுவான்.ஆனால்,நமக்கு சேவை செய்ய நம்மிடம் வாக்குபிட்சை கேட்டவன் நம்மை தலையில் ஏறி மிதிக்கும் நிலை வருகிறது இந்த பாரதத்தில்.

D2
N2

இனி இந்த நிலைமை ஒவ்வொருத்தரின் வாழ்விலும் மாற்றப்படவேண்டும் என்றே இந்த தேர்தல். உங்கள் வாக்கை எவனுக்கோ பிட்சையாய் போடுவதை நிறுத்திவிட்டு உங்கள் கண்ணுக்கு தெரிந்த ஒருவனுக்கு அன்பளிப்பாய் அளித்தால் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் நிகழ்த்துவான் .மாற்றம் ஒன்றே மாறாதது.

-சண்முக நாதன்

N3

Leave A Reply

Your email address will not be published.