அறிவோம் தொல்லியல்-12 பயணங்கள் முடிவதில்லை..

0
1

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ள ஊர் செம்பியன் கண்டியூர். இவ்வூரைச் சேர்ந்த புலவர்.சண்முகநாதன் மரம் வெட்ட தன் வீட்டில் குழிதோண்ட இரு புதிய கற்கால கருவிகள் கிடைத்தது, இதன் சிறப்புகருதி அதனை தரங்கம்பாடி அகழ்வைப்பகத்தில் ஒப்படைத்துள்ளார். இதனை ஆய்வுசெய்த கண்காணிப்பாளர் அதில் ஒரு கருவியில் எழுத்துப்பொறிப்புள்ளது தெரிய வந்தது.

இதன் சிறப்பையுணர்ந்த தமிழக தொல்லியல்துறை இங்கு அகழாய்வு செய்ய முடிவு செய்தது. பிப்ரவரி, 2006 ல் இவ்வூரில் அகழாய்வு செய்யப்பட்டது. அதில் கிடைத்த ஒரு கைக்கோடாரியில், ஹரப்பா, மொகஹஞ்சாதாரோ கால பண்பாட்டு (3500 வருடம்) எழுத்துப் பொறிப்புகள் கிடைத்தது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தமிழகத்தில் சில இடங்கங்களில் இத்தகைய கோடாரிகள் கிடைத்தாலும், எழுத்துப்பொறிப்புடன் எங்கும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் சிறப்புகருதி இவ்வூரின் இரு காவிரிக்கரையிலும் முதற்கட்டமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

4

முறையான அறிவியல்முறைப்படி ஆய்வு தமிழக தொல்லியல்துறையால் 2008 ம் ஆண்டு நடத்தப்பட்டது.

ஊர் அமைவிடம்:

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், காவிரி நதியின் கிளையான விக்கிரமஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது! சங்ககால சோழர் பெருவழியான திருவேள்விக்குடிக்கு 2 கி.மீ அருகே அமைந்துள்ளது. கல்வெட்டுரீதியாய் சிறப்பான கோவிலிது. இக்கல்வெட்டுகளின்படி 1000 ஆண்டு முன்னரே செம்பியன்கண்டியூர் என அழைக்கப்பட்டுள்ளது தெரிகிறது!

காவிரிபாயும் வளமான மருதநிலப்பகுதி இவ்வூர்.

 

கற்கால கருவியின் சிறப்பு:

திரு.சண்முகநாதன் வீட்டில் கிடைத்த கோடாரியில், எழுத்துப்பொறிப்புள்ள கோடாரியை ஆய்வு செய்த தொல்லியலறிஞர்.திரு.ஐராவதம் மகாதேவன் இக்கோடாரியில் உள்ள தமிழி எழுத்து 3000 ஆண்டுகள் பழமையானது, மேலும் காவிரிப்படுகை தமிழரின் நாகரீகம், சிந்துசமவெளிக்கு ஒப்பானது, எனவும் தெரிவித்தார், மேலும் இங்கு கிடைத்த தாழிகள் பெருங்கற்கால பண்பாட்டைச் சேர்ந்தவை என்றும், அவற்றில் கிடைத்த குறியீடுகள்  பிராமி எழுத்துக்கள் என அழைக்கப்படும் தமிழி எழுத்துக்கு முன்னர் உள்ள வரிவடிவம் என குறிப்பிடுகிறார். இக்கருத்தையே திரு.நடன.காசிநாதன் அவர்களும் தனது கட்டுரைகளில் குறிப்பிடுகிறார்.

 

முதன்முதலாக இப்பகுதியில் அகழாய்வு கோடாரிகள் கிடைத்த திரு.சண்முகநாதன் வீட்டின் பின்புறம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் மேற்ப்பகுதியில் அதிகஅளவு கருப்புசிவப்பு வண்ண பானையோடுகள் கண்டெடுக்கப்பட்டது. இப்பகுதி மற்றபகுதிகளை விட சற்றுஉயரமாய் மண்மேடாய் காட்சியளிக்கிறது.

 

2

பிறஅகழாய்வு பகுதிகள்:

 

புஞ்சைத்திடல்:

 

இப்பகுதி செம்பியன் கண்டியூரிலிருந்து மேற்கே ஒரு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் நிறைய தாழிகள் இருந்திருந்க்கக்கூடும். தற்போது உடைந்துபோன சிதைவுற்ற விதவிதமான பானையோடுகள் கிடைக்கிறது, மக்கிய எலும்புகளும் இங்கு சேகரிக்கப்பட்டது.

 

ஐயனார்கோவில் திடல்:

இப்பகுதி முற்காலத்தில் ஒரு வாழ்விடப்பகுதியாய்(habitation site) இருந்துள்ளது, இங்கு கிடைத்த கருப்புவகை மட்கலத்தில் கிடைத்த குறியீடுகள், கொடுமணல், பூம்புகார் அகழாய்வில் கிடைத்த குறியீட்டுடன் ஒத்துபோகிறது. பெருங்கற்கால மக்கள் மட்டுமின்றி, வரலாற்று கால மக்களும் வாழழ்ந்த தடையங்கள் தென்படுகிறது. இம்மண்மேடு அருகேயுள்ள ஐயனார் சிற்பம் 15-16 ம் நூற்றாண்டு சிற்பமைதியில் உள்ளது. இக்காலம் வரை இப்பகுதி மக்களின் வாழ்விடமாக இருந்துள்ளது!

 

அம்மன்கோவில் திடல்:

இவ்விடத்திலும் பெருங்கற்காலம் தொட்டு, வரலாற்று கால பொருட்களும், 12 ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுடுமண் குழாயொன்று  கிடைத்துள்ளது. 15 ம் நூற்றாண்டு வரை இங்கே மக்கள் இருந்தது தெரிகிறது, காவிரியின் கிளைநதியான விக்ரமனாற்றங்கரையில் இத்திடல் அமைந்துள்ளது, இங்குள்ள மண்மேடு சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்து இருப்பதால், அன்று ஒரு சிறந்த நகரமாய் இருந்திருக்கும்.

 

கண்டியூர் பெயர்க்காரணம்:

 

இவ்வூரில் அரண்மனையும், சிவன் கோவிலும் இருந்து அழிந்துள்ளது, அவ்விடம் இன்று “படையாட்சித்திடல்” என அழைக்ப்படுகிறது. சோழராட்சியில் இப்பகுதியில் கண்டியூர், ஸ்ரீநக்கன் என்ற குறுநிலமன்னன் ஆண்டுள்ளான். இவர் பெயராலேயே இவ்வூர் அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இவ்விடத்தில் நான்கு தொல்லியல் குழிகள் போடப்பட்டது. அவற்றின் விவரத்தை வரும் வாரம் காண்போம்.

Attachments area

 

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்