திருச்சி லால்குடி அரசு மருத்துவமனையில் பரபரப்பு

0
1

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கூகூரில் வசிக்கும் ராஜசேகர் வயது 30 இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்து வந்தார் பிறகு இவர் சொந்த ஊருக்கு வந்து லால்குடி அடுத்த வாளாடி சத்திரம் கிராமத்தில் சுகன்யா வயது 24 என்ற பெண்ணை 3 ஆண்டு முன் திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில்  இன்று காலையில் இருவரும் சேர்ந்து சாப்பிடும் போது ராஜசேகர் சுகன்யாவை குறைசொல்லியதாக தெரிகின்றது. இதனால் மனம் உடைந்த சுகன்யா வயலுக்கு வாங்கிய பூச்சி மருந்தை குடித்து விட்டு வீட்டிற்குள் குழந்தையோடு படுத்துள்ளார் நீண்ட நேரம் வெயிலில் வரவில்லை சந்தேகம் அடைந்த அவர் உறவினர் சுகன்யா மயக்கம் நிலையில் உள்ளது தெரிந்து அவரை லால்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறகு சுகன்யா பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்து உள்ளனர். மேலும் சுகன்யா இறந்த தகவல் அறிந்த லால்குடி காவல் துறையினர் திருமணம் நடந்தது 3 ஆண்டுகளில் இறந்ததால் லால்குடி ஆர்டிஒ விசாரணை நடத்த வேண்டும் என்று சுகன்யா சுகன்யா சாவில் சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் லால்குடி நாகம்மையார் தெருவில் வசித்த அருண்பிரபு வயது 30 இவருக்கு லால்குடி அடுத்த செம்பறை கிராமத்தில் வசித்து வந்த சகாயம் -வசந்தா இவர்களின் மகள் பிரதீபா வயது 19 இவருக்கு 9 மாதங்களுக்கும் முன்பு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அருண்பிரபு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் 6 ஆண்டு முன் திருமணம் செய்து கொண்ட முதல் மனைவிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஏற்கனவே முதல் மனைவி தூக்கில் தொங்கி இறந்து விட்டார் பிறகு பிரதீபாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று இரவு பிரதீபாவும் வீட்டில் தூங்குமாட்டி இறந்து விட்டார் அருகே உள்ளவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தபோது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர், பிறகு பிரதீபா பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு அருண்பிரபு உறவினர்களும் போலீஸ்சுக்கும் பயந்து லால்குடி அடுத்த தெங்கால் செல்லும் வழியில் மரத்தில் தூக்குப்போட்டு இறந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் பிரதீபா கணவர் அருண்பிரபு இறந்து விட்டார் என்று கூறியுள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீஸ் இறந்து போன அருண்பிரபு உடலையும் கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக அரசு மரு‌த்துவமனை‌க்கு அனுப்பி வைத்தனர்.

2

மேலும் இறந்துபோன பிரதீபா 4 மாத கர்ப்பிணி பெண் என்பதாலும் திருமணம் நடந்து ஒரு வருடம் ஆகிறது என்பதாலும் ஆர்டிஒ விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதீபா தாயார் வசந்தா புகார் செய்துள்ளார். இதனால் லால்குடி அரசு மருத்துவமனை பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

செய்தி – ஆசீர்வாதம்

3

Leave A Reply

Your email address will not be published.