திருச்சியில் ஆபாசமாக பேசியதாக அரசு அதிகாரி மீது புகார்.

0
1

திருச்சியில் திருநங்கைகளை ஆபாசமாக பேசியதாக அரசு அதிகாரி மீது புகார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திட்ட அலுவலர் திட்டியதாக கூறி ஆட்சியரிடம் மனு கொடுத்த திருநங்கை.

2
கஜோல்

திருச்சி மாவட்டம், தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரிய உறுப்பினராக இருந்து வருபவர் கஜோல். இவர் சமீபத்தில் (ஏப்-13), மாவட்ட திட்ட அலுவலரை சந்தித்து பேச மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ளன அவருடைய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது மாவட்ட திட்ட அலுவலரான சரவணன் அவரை தரக்குறைவாக பேசியதாக குற்றம் சாற்றி பத்திரிகையாளரிடம் கூறினார்.

இதுதொடர்பாக கஜோலை நம்மதிருச்சி  செய்திக்காக தொடர்புக்கொண்டு பேசினோம், அப்போது அவர் கூறுகையில், நான் மற்றும் திருச்சியில் உள்ள திருநங்கைகள் சங்கத்தை சேர்ந்த பலர் இணைந்து திருச்சி கோர்ட் அருகே கடை ஒன்று நடத்தி வருகின்றோம், அக் கடையானது முன்னாள் திருச்சி மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி மற்றும் முன்னாள் திட்ட அலுவலர் பாபு ஆகியோர் எங்களுக்கு அரசிடமிருந்து தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்கான இதுபோன்ற கடைகள் அமைத்து தரும் திட்டத்தின் மூலம் திருச்சியில் அமைத்து தந்தனர்.

இதில் நாங்கள் தற்போது வரையில் பழக்கடை மற்றும் மூங்கில்களால் தயாரிக்கப்படும் கைவினை பொருள் போன்றவைகள் தயாரித்து தயாரித்து விற்பனை செய்து வருகின்றோம், இந்த கடை எங்களுக்கு வழங்கப்பட்டபோது வரும் லாபத்தில் 10% விகிதம் கட்ட திட்ட அலுவலர் பாபு சொல்லியிருந்தார். பின்னர் அது 20% சதவிகிதமாக மாறியது. கடந்த சில மாதமாக எங்களுடைய தொழிலில் சரியான லாபம் எதும் காணமுடியாமல் போனது, இருந்தாலும் மாதம் மாதம் பணத்தை கடைக்கு பொறுப்பாளரான மல்லியம் பத்து பஞ்சாயத்து செல்வி என்பவர் கணக்கு பார்த்து லாபத்தையும், அசலையும் எங்களுக்கு வழங்குவார்.

இந்த நிலையில் நாங்கள் செல்வி அவர்களிடம் வருகின்ற வருமானத்தில் 10% பணத்தை கொடுத்து வந்தோம் அனால் அவர் இதுவரைக்கும் நாங்கள் கொடுத்த பணத்திற்கு எந்தவித ரிசிப்ட் எதுவும் வழங்கியதில்லை, இடையில் திட்ட அலுவலர் பாபு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார் பின்னர் ஒருவருட காலமாக அதிகாரிகள் யாரும் இதனை கண்டுக்கொள்ளவில்லை. சமீபத்தில் செல்வி அவர்களை கண்டு மாத பணத்தை கொடுக்கச்சென்றபோது அவர் வாங்க மறுத்து, கடைகள் அனைத்திற்கும் புதிய வாடகை தொகை நிர்ணயிக்கப்போவதாக திட்ட அலுவலர் அலுவலகத்தில் கூறினார்கள் என்றார்.

4

இதுதொடர்பாக நான் புதிய திட்ட அலுவலரை சந்திக்க இருந்த நிலையில் சமீபத்தில் தேர்தல் விழிப்புணர்வு கூட்டத்திற்கு திட்ட அலுவலர் சரவணன் என்னிடம் திருநங்கைகள் இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள அழைத்துவரச் சொன்னார். எனக்கு உடல்நிலை சரியில்லமால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தேன். இருப்பினும் எனது நபர்களிடம் கூறியிருந்தேன் அவர்களும் சரி என்று கூறினார். இதற்கிடையில் மாவட்ட திட்ட அலுவலரை சந்திக்க அலுவலகம் சென்ற போது, அவர் என்னை சந்திக்க மறுத்தார். இருப்பினும் அவரை சந்தித்து பேசிய போது,

அவர் என்னை பார்த்து எதுக்கு வந்த, உங்களுடைய தேவைகளுக்கு நாங்கள் ஆளில்ல, நீங்கலாம் ஒரு ஆளுன்னு நீங்க ஒரு இனம்னு உங்களுக்கு ஒட்டு போடுறதுக்கு வாக்காளர் அட்டை வேற கொடுத்துருக்காங்க, இந்த வேல பாக்குறதுக்கு வேற எதும் வேலைய பாக்குளாம்ல , நாங்க கூப்பிட்டாதான் வர மாட்டீங்க வேற யாராச்சும் கூப்பிட்டா போவீங்களா என்று தரக்குறைவாக பேசியதுடன் அவர் டேபிளில் உள்ள புத்தகத்தை தூக்கி அடிக்கவந்தார். வெளியே நின்றுக்கொண்டிருந்த உதவியாளரை அழைத்து கழுத்தை பிடித்து வெளியே எரி என்று அவரிடம் சொல்லி கேவல படுத்தினார். இதனால் நான் கோபமடைந்து அவரை வஞ்சித்து பேசினேன். அதுக்கு அவர் உன்னால என்ன என்னா பண்ணிட முடியும்னு அதிகார திமிரில் பேசினார். இதனால் நான் வெளியே வந்து பத்திகையாளர்களை சந்தித்து கூறினேன்.

அப்போது ஒரு செய்தியாளர் திட்ட அலுவலர் சரவணனிடம் கேட்ட போது அப்படியெல்லாம் இல்ல சார், இவங்க தான் வெளில நின்று சத்தம் போட்டாங்க, நீங்க வேணாலும் கேமராவை பாருங்க னு சொன்னார். அதற்கு அந்த பத்திரிகையாளர் வெளியில கேமரா இருக்கு அதனால அவங்க சத்தம் போட்டங்கன்னு கேமரா வ பாக்க சொல்றிங்க , உள்ளே நீங்க அவங்கள என்ன சொல்லி பேசுனிகனு நாங்க எப்படி தெரிஞ்சிக்கிறது. உள்ள கேமரா இல்லன்னு அந்த தைரியது ல சொல்றிங்கன்னு கேட்டார். 

இதுதொடர்பாக மன உடைச்சலான நான் மாவட்ட ஆட்சியரருக்கு மனு கொடுத்துள்ளேன்.

ஆனால் அந்த மனு இது வரையும் விசாரித்தது போல் தெரியவில்லை.

எங்களை போன்ற மூன்றாம் இனத்தவர்கள் இந்த சமூகத்தில் சாதிக்க முற்படுவது மிகக் குறைவு இருப்பினும் நாங்கள் மேலே வந்தால் இதுப்போன்ற பொறுப்பற்ற அதிகாரிகள் எங்களை மட்டம் தட்டி கீழே கொண்டுப்போகின்றனர். என்று குற்றம் சாற்றியுள்ளார். பாதிக்கப்பட்ட கஜோல்….

இதுத்தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, கஜோல் ஏற்கனவே ஒரு அதிகாரியின் பெயரில் தன்னை தகாத வார்த்தைகளால் பேசினார் என்று புகார் கொடுத்துள்ளார். இது இரண்டாவது முறையாக இதுபோன்று புகார் தருகிறார், தொடர்ந்து அதிகாரிகள்  மீது புகார்கள் தவறாக அளித்து வருகிறார் என்று கூறினர்.

மக்களின் குறை, நிறைகளை கண்டு உதவும் அரசு அதிகாரிகளே இப்படி நடந்துகொண்ட  சம்பவம் திருச்சி மாவட்ட நிர்வாகத்தில் பெரிய கேள்விக்குரியாகியுள்ளது. கண்டுக்கொள்வாரா மாவட்ட ஆட்சியர்……

3

Leave A Reply

Your email address will not be published.