திருச்சி விமானநிலையம் வளர்ச்சியில் புது உச்சத்தை எட்டியது

0
Full Page

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையமானது மிகக்கடுமையான காலகட்டமான கடந்த நிதியாண்டு 2018-19 ம் 4.2% வளர்ச்சியைப் பெற்று தனது வளத்தை நிரூபித்துள்ளது.

கடந்ந நிதியாண்டு (2018-19) உள்நாடு மற்றும் பன்னாட்டு விமானப்பயணிகளைச் சேர்த்து 15,76,831 பயணிகளைக் கையாண்டுள்ளது.
இது இதற்கு முந்திய ஆண்டான (2017-18) ல் கையாண்ட 15,13,273 பயணிகளைக் காட்டிலும் 4.2% வளர்ச்சி பெற்று, பயணிகளைக் கையாளுவதில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதேபோல் பன்னாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கையைப் பொறுத்து,
கடந்ந நிதியாண்டு (2018-19) 12,48,743 பயணிகளைக் கையாண்டுள்ளது.
இது இதற்கு முந்திய ஆண்டான (2017-18) ல் கையாண்ட 13,76,254 பயணிகளைக் காட்டிலும் 9.26% வளர்ச்சி குறைவு ஆகும்.

Half page

இதேபோல் உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கையைப் பொறுத்து,
கடந்ந நிதியாண்டு (2018-19) 3,28,058 பயணிகளைக் கையாண்டுள்ளது.
இது இதற்கு முந்திய ஆண்டான (2017-18) ல் கையாண்ட 1,37,019 பயணிகளைக் காட்டிலும் 139.43% வளர்ச்சி அதிகமாகும்.
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தைப் பொறுத்து கடந்த நிதியாண்டு 2018-19 கையாண்ட உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை புதிய வரலாற்று உச்சமாகும்.

மேலும்,
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தைப் பொறுத்து கடந்த நிதியாண்டு 2018-19 ஒட்டுமொத்த அளவில் பெற்ற 4.2% வளர்ச்சியானது மிகக்கடுமையான சோதனைக்காலத்தில் பெற்ற வளர்ச்சியாகும்.
பன்னாட்டு விமானசேவையைப் பொறுத்து,
தொழில்நுட்ப காரணங்களுக்காக “தாய் ஏர் ஏசியா”வால் விலக்கிக்கொள்ளப்பட்ட “திருச்சிராபபள்ளி – பாங்காக் டான்முயாங்” விமானசேவை,
ஏர் ஏசியாவின் தினசரி நான்காவது “திருச்சிராப்பள்ளி – கோலாலம்பூர்” விமானசேவை,
மலிண்டோ ஏரின் தினசரி மூன்றாவது “திருச்சிராப்பள்ளி – கோலாலம்பூர்” விமானசேவை.
குறிப்பிட்ட காலங்களில் குறைக்கப்பட்ட, ஏர் லங்காவின் இரண்டாவது “திருச்சிராப்பள்ளி – கொழும்பு” விமானசேவை,
கடந்த நவம்பர் மாதத்திலிருந்து இன்றுவரை இண்டிகோவின் வாரத்திற்கு ஏழு என்ற நிலையில் இருந்து வாரத்திற்கு ஐந்தாக குறைக்கப்பட்ட “திருச்சிராப்பள்ளி – சிங்கப்பூர்” விமானசேவை,
கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின்,
வாரத்திற்கு ஏழு என்ற நிலையில் இருந்து வாரத்திற்கு ஐந்தாக குறைக்கப்பட்ட “திருச்சிராப்பள்ளி – ஷார்ஜா” விமானசேவை,
போன்ற சேவை குறைப்புகளையும் மீறி கடந்த நிதியாண்டான 2018-19ல் 12,48,773 பன்னாட்டு விமானபயணிகளைக் கையாண்டது திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தின் பயணிகள் வளத்திற்கு (Potential) சிறந்த உதாரணமாகும்.

அதேபோல்,
உள்நாட்டு போக்குவரத்தில்,
கடந்த நிதியாண்டில் இந்தியாவின் முன்னணி விமானநிறுவனமான “இண்டிகோ” சேவை தொடங்குகிறது.
ஆனால்,
கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு மேல் இங்கு சேவை வழங்கி வந்த “ஜெட் ஏர்வேஸ்” ஆனது தனது சொந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இங்கிருந்து முற்றிலும் தனது சேவையை விலக்கிக்கொண்டது.
அதிலும்,
தொடர்ந்த கடுமையான உழைப்பின் பலனாக தொடங்கப்பட்ட “திருச்சிராப்பள்ளி – பம்பாய்” தினசரி நேரடி விமானசேவையானது விலக்கிக்கொள்ளப்பட்டது உண்மையிலேயே திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்திற்கு மிகக்கடுமையான பின்னடைவாகும்.
இருப்பினும் இண்டிகோ ஏர் துணையுடன் உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கையானது
கடந்ந நிதியாண்டு (2018-19) 3,28,058 பயணிகளைக் கையாண்டுள்ளது.
இது இதற்கு முந்திய ஆண்டான (2017-18) ல் கையாண்ட 1,37,019 பயணிகளைக் காட்டிலும் 139.43% வளர்ச்சி அதிகமாகி புதிய உச்சத்தைத் தொட்டது மனநிறைவே!

நடப்பு நிதியாண்டான 2019-20 ல், புதிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமானநிறுவன சேவைகள் கிடைக்குமென நம்புவோம்.
“திருச்சிராப்பள்ளி – பாங்காக்” நேரடி விமானசேவை மீட்டெடுக்கப்படும் என நம்புவோம்.
கால் நூற்றாண்டிற்கும் மேற்பட்ட வளைகுடா நாடுகளுக்கான விமானசேவைகள் கிடைக்குமென நம்புவோம்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.