திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து கொதிகலன் கட்டுமானத் தளவாடங்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு.

திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து கொதிகலன் கட்டுமானத் தளவாடங்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாட்டிலும் அமையவுள்ள 12 மின் திட்டங்களுக்காக மொத்தம் 820 டன் எடையுள்ள கொதிகலன் கட்டுமானத் தளவாடங்கள் திருச்சி பெல் நிறுவனத்திலிருந்து வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
வடக்கு கரன்புரா, தூத்துக்குடி, வட சென்னை, உப்பூர், யதாத்ரி, பங்கி, பத்ராத்ரி, உடன்குடி, புஸாவல், விஜயவாடா, வங்கதேச மைத்ரி உள்ளிட்ட மின் திட்டங்களுக்காக சுமார் 820 டன் எடையுள்ள, கொதிகலன் பாகங்கள், வால்வுகள் உள்ளிட்ட கட்டுமானத் தளவாடங்கள் திருச்சி பெல் நிறுவனத்திலிருந்து வழங்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அதன்படி, முதல்கட்டமாக மொத்தம் 36 லாரிகளில் கொதிகலன் பாகங்கள் உள்ளிட்ட தளவாடங்கள் வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
திருச்சி, திருமயம், சென்னை மின்னாலைக் குழாய்கள் பிரிவு பொதுமேலாளர் (பொறுப்பு) ஆர். பத்மநாபன், லாரியை கொடியசைத்து அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில், வணிகம், திட்டமிடல் பொதுமேலாளர் வி. சீனிவாசன், நிதித்துறை பொதுமேலாளர் எம். நீலகண்டன், கொதிகலன்களுக்கான துணை இயக்குநர் ஏ. சிவக்குமார், பொதுமேலாளர்கள் எம்.வி. செல்வன், கே. மோகன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
