திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இரட்டை இலையும் கிடையாது! சூரியனும் கிடையாது! சரவெடியாய் வெடித்த சாருபாலா !  

0
Full Page

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இரட்டை இலையும் கிடையாது சூரியனும் கிடையாது

சரவெடியாய் வெடித்த சாருபாலா

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சாருபாலா திருச்சி பீமநகர் பகுதியில் வாக்கு சேகரித்து பேசுகையில் மோடி அரசு கிட்ட எடப்பாடி அரசு அடகு வைத்து விட்டார்கள். இங்கு உதய சூரியனும் கிடையாது. இரட்டை இலையும் கிடையாது. எல்லாம் பயந்து வேண்டாம்னு சொல்லிட்டாங்க. நான் உள்ளூர் வேட்பாளர். தர்மபுரியில் இருந்து ஒருத்தர் இங்கே போட்டி போடுகிறார் மருத்துவராம். மற்றொருவர் திருச்சி வழியாக சென்னை செல்வாராம் திருச்சி வழியாக சென்றாலே திருச்சிவாசி ஆகிவிட முடியுமா ?  ஹோட்டல்ல இருந்து ஓட்டு கேட்கிறார்கள். சிந்திக்க வேண்டும். திருச்சி வாசியாக இருந்தா வீடு இருக்கணும் . அடையாள அட்டை இருக்கணும் . ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 இலட்சம் ரூபா போடறதா சொன்னாங்க போட்டாங்களா ?

Half page

500 ரூபாய் 1000 ரூபாய் பணத்தாள்களை செல்லாது என சொல்லி மக்களை நடுத்தெருவில் நிற்க வைத்தார்கள். கஜா புயல் தமிழ்நாட்டில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் நாகப்பட்டினம் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. மோடி வந்தாரா ?  தேர்தல் வந்தவுடன் வாக்கு சேகரிக்க நான்கு ஐந்து முறை வந்துட்டாரு. மோடி அரசும் எடப்பாடி அரசும் விரட்டப்பட வேண்டும். சிறுபான்மை சமுதாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மோடி அரசு உள்ளது. நாமெல்லாம் இங்கு விசேஷம் என்றால் நீங்க பிரியாணி கொடுப்பீங்க. கிறிஸ்தவர்கள் கேக் கொடுப்பார்கள். அவர்களுக்கு நாங்க இனிப்புகள் வழங்குவோம்.

இப்படி அண்ணன் தம்பியா சகோதர சகோதரிகளா இருக்கின்றோம். ஆனால் மோடி அரசு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது . மறுபடியும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயக மரபு படி தேர்தலே நடக்காது அதிபர் தேர்தல் போல் அறிவித்து விடுவார்கள். நமது சின்னம் பரிசுப்பெட்டகம் அண்ணன் டிடிவி தான் நாளைய முதல்வர் ஆவார்கள். எனவே மக்கள் அனைவரும் பதினெட்டாம் தேதி பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொண்டார் மாநகர செயலாளர் சீனிவாசன் அவைத் தலைவர் ராமலிங்கம் பகுதி செயலர் இப்ராஹிம் பிச்சை மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் மற்றும் மாநில மாநகர பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்

Quarter page

Leave A Reply

Your email address will not be published.