திருச்சி அருகே பக்தர்கள் மீது லாரி மோதி விபத்து.

0
1

திருச்சி அருகே பக்தர்கள் மீது லாரி மோதி விபத்து.

முசிறி அருகே பாதயாத்திரையாகச் சென்ற பக்தர்கள் கூட்டத்துக்குள் லாரி புகுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
தொட்டியம் ஒன்றியம், நாகையநல்லூர் ஊராட்சி, நானாப்பட்டியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு மாலை அணிந்து, வெள்ளிக்கிழமை இரவு பாதயாத்திரையாகப் புறப்பட்டு வந்தனர்.

2

முசிறி அருகிலுள்ள உமையாள்புரம் பகுதியில் நள்ளிரவு பாதயாத்திரைக் குழுவினர் வந்த போது, பின்னால் வந்த லாரி கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் நானாப்பட்டி மாதவன் மனைவி பானுமதி (35) பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும், வீ. ராணி (37) பலத்த காயங்களுடன் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

4

இதுகுறித்து முசிறி போலீஸார் வழக்குப்பதிந்து, கடலூர் மாவட்டம், பழஞ்சநல்லூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செ. ரமேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்