திருச்சியில் ஒரே அணிக்குள் நடக்கும் மாமியார், மருமகள் சண்டை…..

0
Business trichy

திருச்சியில் ஒரே அணிக்குள் நடக்கும் மாமியார், மருமகள் சண்டை…..

திருச்சியில் ஒரே தலைவரை கொண்ட அணிக்குள் நடக்கும் மாமியார், மருமகள் சண்டை  எங்கே போய் முடியப்போகிறதோ
தேர்தல்.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சியில் அனைத்து கட்சிகளும் போட்டிக்கு போட்டியாக மக்களிடம் அவர்களது கொள்கைகளையெல்லாம் கூறி விரைவாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சி சாத்தனூரில் ஏப் -14 இன்று காலை 10 மணியளவில் அதிமுக -வினரும், அமமுக -வினரும் ஒட்டு சேகரித்துக் கொண்டிருக்கும் போது இருவரிடையே தகராறு நிலவியுள்ளது.

Kavi furniture
MDMK

திருச்சி சாத்தனூர் அதிமுக அணியை சேர்ந்தவர் கந்தசாமி, இவர் 38-வது வட்ட செயலாளராகவும், தென்றல் நகர் கூட்டுறவு கட்டிட சங்க தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் ஏப் -14 இன்று காலை 10 மணியளவில் தனது கட்சிக்காரர்கள் மற்றும் மகளிர் அணியுடன் சாத்தனூர் பகுதியில் வீடு, வீடாக வாக்கு சேகரித்து வந்துள்ளார்.

கந்தசாமி வாக்குக்கேட்டு வருவதை கண்டு அப்பகுதியில் எதிர்பார்த்திருந்த அமமுக கட்சியினை சேர்ந்த மதி, வெள்ளதுரை, அழகர், பிரகாஷ் போன்ற நான்கு பேர்க்கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக கந்தசாமியை இழுத்து எங்களிடலாம் ஒட்டு கேட்க மாட்டியா என்று கையிலிருந்த இரும்பு ராடுகளால் கந்தசாமியை தாக்கியுள்ளனர்.

இதில் கந்தசாமி சம்பவ இடத்திலேயே சுயநினைவின்றி கிடந்துள்ளார், அதன்பின் கந்தசாமியை அப்பகுதி மக்களும், கட்சிக்காரர்களும் சிகிச்சைக்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர், பிறகு இச்சம்பவம் குறித்து கே கே நகர் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருவதுடன் கந்தசாமியை தாக்கிய நான்கு நபர்கள் மீது வழக்குப்பதிந்து தேடிவருகின்றனர்.

இதுதொடர்பாக கந்தசாமி சிகிச்சை பெரும் மருத்துவமனையில் கூடியிருக்கும் அவரது ஆதரவாளர்களான அதிமுகவினர் பேசுகையில் ஒரே கட்சிக்களுக்குள்ளேயே இதுப்போன்ற அடிதடி நிகழ்வானது, குடும்பத்தில் நடக்கும் மாமியார் மருமகள் சண்டையை விட பெரிதா இருக்குது என்கின்றனர்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.