
ஸ்ரீரங்கம் யானை கொட்டகை இடிப்பு.
ஸ்ரீரங்கம் யானை பாகனை பணி நியமனம் செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பூலோக வைகுண்டம் என்று கூறப்படும் 108 வைணவ தலங்களில் முதன்மை தலமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் யானை ஆண்டாள் திருக்கோவில் திருப்பணியில் ஈடுபடுத்தப் பட்டிருக்கின்றது. தமிழக அரசு யானைக்கு மேலும் ஒரு பாகனை நியமித்து உத்தரவிட்டதில் யானைப் பாகன் ஸ்ரீதர் விலகினார் பின் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடைபெற்றது அதில் யானைப்பாகன் ஸ்ரீதரை பணி நியமனம் செய்ய கூறப்பட்டு உள்ளது ஆண்டாள் யானையானது
திருச்சியைச் சேர்ந்த பக்தர் அண்ணாமலை என்பவரால் 16-10-86 அன்று கோவையிலிருந்து 8 வயது குட்டியாக வாங்கி வந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு 33 ஆண்டுகளுக்கு முன்பு தானமாக தரப்பட்டது. ஆண்டாள் ஸ்ரீரங்கம் வந்ததிலிருந்து கோவில் யானை பாகனாக இருந்து ஸ்ரீதர் பராமரித்து வந்தார்.
ஒரு யானைக்கு இரண்டு பாகன்கள் இருக்க வேண்டும் என்று இந்து அறநிலைத்துறை உத்தர விட்டது உடன் ராஜேஷ் என்பவரை உதவிப் பாகனாக நியமனம் செய்தனர்.
2 பாகன்களை நியமிப்பதால் யானை யாருடைய சொல்லைக் கேட்பது என்பதில் குழப்பமேற்படும். அதனால் பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும் என்றார் பின்னர் ஆண்டாளும் ஸ்ரீதரும் பிரிந்தார்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு பிறகு ஆண்டாளை ஸ்ரீதர் 3-1-2013 க்குப் பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி 9- 4-19 ல் சந்திக்க சென்றார் அப்போது இணை ஆணையர் பணி காரணமாக வெளியே சென்றதனால் 10-4-19 அன்று காலை நீதிமன்ற உத்தரவு குறித்து எழுத்துபூர்வமாக எழுதி இணை ஆணையரிடம் கொடுத்துள்ளார் தற்பொழுது ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரம் அருகே யானை கொட்டாய் அப்புறப்படுத்த முடிவு செய்து மின் இணைப்புகள் அப்புறப்படுத்துவதாக ஊழியர்கள் கூறி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

செய்தி – வெற்றிச்செல்வன்.
