நேற்று தான் 2019ம் ஆண்டின் அதிக வெப்பமான நாள்!

0

வழக்கத்தை விட நேற்று வேலூரில் 106 டிகிரி வெப்பநிலைபதிவானதோடு, நேற்று 2019ம் ஆண்டின் அதிக வெப்பமான நாளாக கருதப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வழக்கத்திற்கு மாறாக வாட்டி வதைக்கிறது. அந்த வகையில் நேற்று 11 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது. வேலூரில் 106 டிகிரி பதிவானதோடு, 2019ம் ஆண்டின் அதிக வெப்பமான நாளாகவும் கருதப்படுகிறது. கரூர், பரமத்தியில் 105 டிகிரி, மதுரை தெற்கு, திருச்சி, திருத்தணி ஆகிய பகுதிகளில் 104 டிகிரியும், சேலம், நாமக்கலில் தலா 103 டிகிரியும், தருமபரி பாளையங்கோட்டையில் 102 டிகிரியும், கோயம்புத்தூரில் 100 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளது.

food

இது குறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுவையில், வறண்ட வானிலையே நிலவும். மேலும், தமிழகத்தில் வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதோடு, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6 டிகிரி செல்சியஸ் முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காற்று சுழற்சி மற்றும் காற்று பிளவு காரணமாக தென்காசியில் 8 செமீ, செங்கோட்டையில் 3 செமீ மற்றும் ஆயக்குடியில் 1 செமீ வீதம் மழை பதிவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

source;samayam

gif 4

Leave A Reply

Your email address will not be published.