திருச்சி தொழில் அதிபர் கத்திமுனையில் கடத்தல் !

0
Full Page

திருச்சியில் அடுத்தடுத்து கடத்தப்பட்டு வரும் தொழிலதிபர்கள். கண்டுக்கொள்ளுமா காவல்துறை.? 

 திருச்சியில் கடத்தல் என்பது சமீபகாலமாக இல்லாத ஒன்றாக இருந்தது. தற்போது திருச்சி மாநகருக்குள் கடத்தல் சம்பவம் நடந்திருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

சமீபத்தில் திருச்சி கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் தனபால் கடத்தப்பட்ட சம்பவத்தையடுத்து, தற்போது திருச்சியில் மீண்டும் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தபட்டிருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

Half page

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் டவுன்ஷிப்பை சேர்ந்தவர் செந்தில் வேல் கான்டராக்டர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர்  ஏப் -7 அன்று திருச்சி உறையூருக்கு சொந்த வேலை சம்பந்தமாக காரில் சென்றார். காரை ஒரு இடத்தில் நிறுத்தி இறங்க முயன்றபோது ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, அவருடைய காரிலேயே ஏற்றிச் சென்றனர்.

பின்னர் காரில் வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த 12 பவுன் நகை ரூ.2 லட்சம் பணத்தை பறித்தனர். பின்னர் அவரை திருச்சி-புதுக்கோட்டை சாலையில் இறக்கிவிட்டு அதே காரையும் கடத்தி சென்றனர்.

இதுத்தொடர்பாக செந்தில்குமார் உறையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிந்த இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் விசாரணை மேற்க்கொண்டதில் செந்தில்குமாரை கடத்திச்சென்றது. உறையூர் சாமி (எ)சாமிநாதன், ரவுடி கொட்டப்பட்டு ஜெய்(எ) ஜெயக்குமார், ராப்பூசல் பழனி (எ) பழனிசாமி, கூகூர் பாபு (எ) பாபு, இந்தியன் ஸ்டீல் தங்கவேல்,சாய்த்தரன் பழனியப்பன், புதுக்கோட்டை விவேக்,தமிழ் (எ) தமிழன், அருண், கருப்பையா ஆகியோர் என தெரியவந்து. அதன் பேரில் 11 பேர் மீதும் வழக்குப்பதிந்து தேடிவருகின்றனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.