திருச்சியில் பரபரப்பு நான் நர்மதா.. செருப்பை துடைச்சு தர்றேன்.. அவருக்கு மட்டும் ஓட்டு போடாதீங்க.. அதிரடி பிரச்சாரம்!

0
D1

திருச்சி: கோயிலின் நடுத்தெரு.. பக்தர்களின் செருப்பை துடைத்து கொண்டிருக்கிறார் அந்த பெண்.. ஏதோ உதவி அல்லது வேண்டுதல் போல இருக்கிறது என்று நினைத்தால், “காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டு போடாதீங்க” என்று போற, வர்றவங்க கிட்ட எல்லாம் நூதன பிரச்சாரம் நடத்தி கொண்டிருப்பதை கண்டு அனைவருமே அதிர்ந்து போய்விட்டனர்!

 

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தெற்கு வாசல் வழியாக பக்தர்கள் சென்று வந்து கொண்டிருந்தனர். அப்போது, கோவில் அருகில் உள்ள வீதியின் நடுவே ஒரு பெண் உட்கார்ந்திருந்தார். அந்த வழியாக வரும் பக்தர்களின் செருப்பை கழற்றி தருமாறு கேட்கிறார். பக்தர்களும் அவரிடம் தங்கள் செருப்பை தரவும், அதை அந்த பெண் வாங்கி துடைத்து தருகிறார்.

 

செருப்பை துடைக்கும் சமயத்தில், “திருச்சியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு தயவு செஞ்சு ஓட்டு போட்டுடாதீங்க” என்று சொல்லி கொண்டிருந்தார். இதை அந்த பக்கம் சென்ற காங்கிரஸ் கட்சியினர் நீண்ட நேரம் கழித்துதான் கண்டுபிடித்தனர். பிறகு அந்த பெண்ணிடம் நேரிடையாக சண்டைக்கு போய்விட்டனர். பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீசாரும் வந்துவிட்டனர்.

 

D2

நர்மதா நந்தகுமார்

பிறகு போலீசார் அந்த பெண்ணை யார் என்ன, என்று விசாரித்தனர். அப்போது தன்னுடைய பெயர், நர்மதா நந்தகுமார் என்றும், சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் என்றும் சொன்னார். இந்த நூதன பிரசாரம் குறித்து நர்மதா சொல்லும்போது, “காங்கிரஸ் கூட்டணிக்கு பிரசாரம் செய்யும் வீரமணி, கிருஷ்ண பகவானை ரொம்பவும் இழிவுபடுத்தி பேசுகிறார். இது தெய்வ குத்தம் ஆயிடும்.

 

N2

அதனால இந்த வருஷமும் இயற்கை சீற்றத்தால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டுடும். அப்படி ஒரு நிலைமை வரக்கூடாதுன்னுதான், இங்க போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசருக்கு எதிராக பிரசாரம் செய்து, பக்தர்களின் செருப்புகளை துடைத்து வேண்டுதலை செய்கிறேன்” என்றார்.

 

சிறையில் அடைப்பு

 

இந்த விஷயம் அதற்குள் அங்கு பரவி காங்கிரஸ் கட்சியினரும், திமுகவினரும் திரண்டுவிட்டனர். பிறகு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன் அளித்த புகாரின் பேரில் நர்மதா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

கைதான நர்மதா என்பவர் யார் தெரியுமா? பொன் மாணிக்கவேலுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த டிசம்பரில் திருத்தணி முருகன் கோயிலில் காவடி எடுத்தவர்தான் இவர். பொன்.மாணிக்கவேலு போலவே மீசை, தொப்பி சகிதம் வந்து வேண்டுதலை நிறைவேற்றினார். இவரது அந்த கெட்-அப் போட்டோக்கள் எல்லாம் அப்போது ரொம்ப வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது!

source:one india tamil

N3

Leave A Reply

Your email address will not be published.