தமிழகத்திற்குள் பாஜகவிற்கு இடமில்லை. விவசாயிகள் காட்டம்.

0
Full Page

தமிழகத்திற்குள் பாஜகவிற்கு இடமில்லை. திருச்சியில் விவசாயிகள் காட்டம்.

தமிழகத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களை விவசாயிகள் புறக்கணிப்பார்கள் என ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Half page

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கை, விவசாயிகளுக்கு எதிரானதாக உள்ளதென குற்றம் சாட்டினார்.

இதனால், தமிழகத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களை விவசாயிகள் புறக்கணிப்பார்கள் என குறிப்பிட்ட விஸ்வநாதன், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் என பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.