டெய்லி காலையில 200, நைட் 200 ரூபாய் கொடுக்குறாங்க-கல்லூரி மாணவர்களை விரும்பும் வேட்பாளர்கள் ஏன்?

0

மக்களவைத் தேர்தலும் மினி சட்டமன்றத் தேர்தலும் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு வேட்பாளரும் காலை 7 மணி முதல் பிரசாரத்துக்குக் கிளம்பிவிடுகின்றனர். அப்போது தங்களோடு குறைந்த பட்சம் 100 பேரையாவது அழைத்துச் செல்கின்றனர். காலை, மாலை என இரு வேளைகளிலும் வேட்பாளர்களோடு இந்த கூட்டம் போகிறது.
கூட்டம் சேர்க்காமல் தனியாகச் சென்றால் அல்லது குறைவான நபர்களோடு சென்றால் வேட்பாளர்களின் இமேஜும் பாதிக்கப்படுகிறது. முன்பு போல கட்சித் தொண்டர்களோ, நிர்வாகிகளோ சரியான நேரத்துக்கு வருவதில்லை. ஆண்கள் என்றால் காலை 300, மாலை 300 ஆக அறுநூறு ரூபாய், இரவு ஒரு குவார்ட்டர், மதியம் சாப்பாடு ஆகியவை கட்டாயம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

 

இதனால் பல வேட்பாளர்கள் இப்போது தங்கள் தொகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களை இதற்காக அமர்த்திக் கொள்கிறார்கள். பெரம்பூரில் அதிமுக வேட்பாளர் ராஜேஷ் வாக்கு சேகரித்து சென்றுகொண்டிருந்த போது அவரது வாகனத்துக்கு முன்னும் பின்னும் இரட்டை இலை கொடிகளோடு ஒரு கூட்டம் எப்போதும் செல்லும். அதில் சிலர் மிகவும் இளைஞர்களாக இருந்த நிலையில் அவர்களிடம் விசாரித்தோம்.

 

food

‘காலேஜ்ல படிக்கிறோம்னே…. லீவு விட்டாச்சு. சில பேரு லீவு போட்டிருக்கோம். டெய்லி காலையில 200, நைட் 200 ரூபாய் கொடுக்குறாங்க. பதினைஞ்சு நாள்னு பேசியிருக்கோம். மொத்தம் ஆறாயிரம் ரூபாய் ஆச்சு. மதிய சாப்பாடு. வண்டி கொடுத்துடறாங்க, பெட்ரோலும் போட்டுவிட்டுடுறாங்க. அப்புறம் என்ன? அடுத்த வருஷத்துக்காக சட்டை, ஷுவெல்லாம் இந்த காசுலயே வாங்கிப்போம். வீட்ல சொல்லிட்டுதான் வந்திருக்கோம்” என்றனர் பொறுப்பாக.

சில வேட்பாளர்களின் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசினோம்.
“இந்த வேட்பாளர் என்றில்லை, இப்போது பல வேட்பாளர்கள் அக்மார்க் கட்சிக்காரர்களை விட கல்லூரி, பள்ளி மாணவர்களையே அதிகம் விரும்புகிறார்கள். காலையில் குறித்த நேரத்துக்கு வந்துவிடுகிறார்கள். மாணவர்கள் என்றால் சரக்கு செலவு பெரும்பாலும் கிடையாது. தினமும் கொடுக்கும் படியும் மற்றவர்களை விட மாணவர்களுக்கு குறைவுதான். அதனால் வேட்பாளர்களின் தினப்படி செலவு கணிசமாகக் குறைகிறது. இது ஒரு பக்கம் என்றால்,கல்லூரிகள் வைத்திருக்கும் பல வேட்பாளர்கள் தங்களது மொத்த தேர்தல் நெட்வொர்ககையும் மாணவ சக்தி மூலமாகவே இயக்கி வருகிறார்கள். பணப்பட்டுவாடா வரை அதில் அடக்கம்” என்கிறார்கள்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.