41 முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை- அமமுக தேர்தல் அறிக்கை

0
gif 1

 

  1. தமிழகத்தில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு 5 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 

  1. பாஜக கொண்டு வந்த முத்தலாக் சட்டத்தில் முஸ்லிம் சமுதாயத்தோடு ஆலோசித்து திருத்தங்கள் கொண்டு வரப்படும்.

 

gif 3
  1. சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளுக்கு மத்திய அரசுகள் இன்னும் அமல்படுத்தவில்லை. அதனால் சிறப்பு குழு அமைத்து சட்ட அங்கீகாரம் அளித்து முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

 

  1. 41 முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

 

  1. தற்போது இருக்கும் முஸ்லிம்களின் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நடைபெறும் குளறுபடிகளை தடுக்க முஸ்லிம்களை கொண்ட குழு அமைக்கப்படும்.

 

  1. வக்ஃபு சொத்துக்கள் மீட்கப்படும்.

 

  1. வக்ஃபு சொத்துக்கள் மீட்கப்பட்டு ஏழை முஸ்லிம் களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தப்படும்.

 

  1. முஸ்லிம்கள் பயனடையும் விதமாக வக்ஃபு வாரியம் மூலமாக மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்.

 

  1. இமாம்கள், துணை இமாம்கள், முஅத்தீன்கள் மாத வருமானம் ரூ. 40 ஆயிரம்வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

  1. கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தில் உள்ள சிக்கல்களை களைய நடவடிக்கை எடுக்கப்படும்.

 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக அளித்துள்ளது. ஆனால், முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் நாங்கள்தான் என்று கபட வேடம் போடும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உட்பட எந்த கட்சியும் முஸ்லிம்கள் நலன் மற்றும் முன்னேற்றம் சார்ந்த எந்தவிதமான வாக்குறுதியையும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை.

 

gif 4

இது தவிர, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற பாசிஸ்டுகளை எந்தவிதமான சமரசமும் இல்லாமல் எதிர்க்கக் கூடிய கட்சியாக அமமுக இருக்கிறது. வாழ்நாளில் எந்த சூழலிலும் பாசிச பாஜகவுடன் தொடர்பு வைக்க மாட்டோம் என்று உறுதியளித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் டி.டி.வி. தினகரன்.

 

இதுவரை தமிழகத்தின் எந்த அரசியல் கட்சியும் செய்யாத வகையில் உலமாவான சகோதரர் தெஹ்லான் பாகவிக்கு  மத்திய சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளித்துள்ளார்.

 

காங்கிரசும், திமுகவும் இஸ்லாமியர்கள் நலன் குறித்தும் பாதுகாப்பு குறித்தும் எந்தவிதமான வாக்குறுதி களும் தரவில்லை. பல்வேறு விதமான பாதிப்புகள் இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஏற்படுத்தியதே காங்கிரஸ் கட்சிதான்.

 

இதனை உணர்ந்துதான் 25 சதவீதம் முஸ்லிம்களைக் கொண்ட மேற்கு வங்கத்தில் மம்தா பாணர்ஜியும், 19.3 சதவீத முஸ்லிம்களைக் கொண்ட உத்திரப் பிரதேசத்தில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும், தெலுங்கானாவில் சந்திர சேகர ராவ் மற்றும் அசாத்துத்தீன் உவைசியும், ஒடிசாவில் முஸ்லிம்கள் ஆதரவு பெற்ற நவீன் பட்நாயக்கும், ஆந்திராவில் முஸ்லிம்கள் ஜெகன் மோகன் ரெட்டியுடனும் சந்திரபாபு நாயுடுடனும் களம் காண்கின்றனர்.

 

இஸ்லாமிய மக்களின் வாக்குகள் பிரியும் என்றும்  ‘A’ Team, ‘B’ Team என்றும் பொய்யான பிரச்சாரம் செய்து முஸ்லிம்களின் வாக்கை திசை திருப்ப தமிழகத்தில் திமுக கூட்டணி பெரு முயற்சி எடுத்து வருகிறது.

 

ஆகவே, திமுக கூட்டணியின் பிரச்சாரத்திற்கு பலியாகாமல், இந்திய அளவில் முஸ்லிம்களின் நலனை முன்னிறுத்தும் தலைவர்கள் முடிவே சரியானது. பிராந்திய கட்சிகள்தான் மத்தியில் கூட்டாட்சியை அமைக்கும் இன்ஷா அல்லாஹ். அதுவே நவீன இந்தியாவை உருவாக்கும்.

 

இந்த தெளிவு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திடம் இருப்பதால் இன்று தமிழக மக்களும் இஸ்லாமிய மக்களும் பெரும் மகிழ்வுடன் வரவேற்கும் தலைவராக டி.டி.வி. தினகரன் இருக்கிறார். எனவே உலமாக்களும், ஜமாஅத்தார்களும், இஸ்லாமிய சகோதர சகோதரிகளும், சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ள அனைவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

என மவ்லவி பாஜில் எம். அபூ பக்கர் சித்தீக் எம்.ஏ., யூசுபி, ரஷாதி

மவ்லானா மௌலவி. சாகுல் ஹமீது பாக்கவி

மவ்லானா மௌலவி. கமாலுத்தீன்*மன்பஈ

உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

 

-வெற்றிச்செல்வன்

gif 2

Leave A Reply

Your email address will not be published.