ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் மக்களிடம் நூதன பிரசாரம் செய்த பெண் கைது.

0
gif 1

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் மக்களிடம் நூதன பிரசாரம் செய்த பெண் கைது.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தெற்கு வாசல் வழியாக பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கோவில் அருகில் வீதியின் நடுவே ஒரு பெண் உட்கார்ந்து அந்த வழியாக வந்த பக்தர்களின் காலணிகளை கழற்றி, அதை துடைத்து கொடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது, அவர் பக்தர்களிடம் திருச்சி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.

gif 3
gif 4

அப்போது, அந்த வழியாக வந்த காங்கிரஸ் கட்சியினர் அந்த பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் விரைந்து சென்று போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

அந்த பெண் சென்னை அண்ணாநகரை சேர்ந்த நர்மதா நந்தகுமார் என்பது தெரியவந்தது. அதற்குள் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினரும், தி.மு.க.வினரும் திரண்டுவிட்டனர்.

இதைதொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில், நர்மதா மீது பொதுஇடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டுவது, கொலைமிரட்டல் விடுத்தல், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக இந்த பிரசாரம் குறித்து நர்மதா நிருபர்களிடம் கூறும்போது, ‘காங்கிரஸ் கூட்டணிக்கு பிரசாரம் செய்யும் வீரமணி கிருஷ்ணபகவானை இழிவுபடுத்தி பேசுகிறார். தெய்வநிந்தனை காரணமாக இந்தாண்டும் இயற்கை சீற்றத்தால் தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது என்றும், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசருக்கு எதிராக பிரசாரம் செய்யவும், பக்தர்களின் காலணிகளை துடைக்கின்றேன் என்ற வேண்டுதலை செய்து கொண்டிருக்கின்றேன்’ என்றார்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.