ராணிக்கு வாக்கு சேகரித்த இளவரசி

0
Business trichy

ராணிக்கு வாக்கு சேகரித்த இளவரசி

இந்திய சுதந்திரத்திற்கு
முன்பும் பின்பும்
மக்கள் பணியில் புதுக்கோட்டை சமஸ்தான வாரிசுகள்

17 வது மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது சுதந்திர இந்தியாவிற்கு முன் இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் ஆட்சி புரிந்தது குறிப்பிடத்தக்கது அவ்வகையில் புதுக்கோட்டை சமஸ்தானமும் ஒன்று.

1686 இல் ரகுநாத தொண்டைமான் ஆட்சி புரிந்தார் அவர்களது வாரிசு ஆட்சி இந்தியா சுதந்திரம் அடையும் வரை தொடர்ந்தது

Full Page

சுதந்திர இந்தியாவுடன் புதுக்கோட்டை சமஸ்தானமும் இணைந்த பிறகு அந்த சமஸ்தான வழக்கம் முற்றுப்பெற்றது.

இருந்தாலும் புதுக்கோட்டை சமஸ்தான பத்தாவது வாரிசாக ராஜகோபால தொண்டைமான் உள்ளார் எப்படி ஒரு அரசர்கள் ஆண்டார்களோ அவ்வழியிலேயே சுதந்திரம் பெற்ற பின்னரும் திருச்சி மாவட்டத்தில் சாருபாலா தொண்டைமான் 2001 முதல் 2009 வரை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயராக பொறுப்பேற்று மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தினார்

பதினோராவது வாரிசாக பிரித்விராஜ் தொண்டைமான் இளவரசி இராதா நிரஞ்சனி உள்ளார்கள். இன்றளவும் இல்லத்திலே அரண்மனையில் பேசும் போது ராஜா விளையாட சென்றுள்ளார் ராணி கோவிலுக்கு சென்றுள்ளார் என்று வழக்கு மொழியில் பேசுவது உண்டு .

11வது வாரிசாக இருக்கக் கூடிய ராதா நிரஞ்சனியை இளவரசி என்று அழைப்பார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக பரிசு பெட்டகத்திற்கு வாக்கு சேகரித்து கொண்டிருக்கக்கூடிய சாருபாலா தொண்டைமானுடன் இளவரசி ராதா நிரஞ்சனியும் ராணி சாருபாலாவுக்கு வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரித்ததைக் கண்ட பொதுமக்கள் ராணிக்கு வாக்கு சேகரித்த இளவரசி என்று புலங்காகிதம் அடைந்தனர்.

Half page

Leave A Reply

Your email address will not be published.