திருச்சி என்ஐடி மீண்டும் முதலிடம்

0
Business trichy

திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழகம் (என்ஐடி) மீண்டும் முதலிடத்தைத் தக்க வைத்து கொண்டது.
என்.ஐ.ஆர்.எப் 2019 எனும் தேசியக் கல்வி நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு மதிப்பிட்ட தரவரிசையை இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திருச்சி என்ஐடிக்கு சான்றிதழ் வழங்கினார். நாடு முழுவதும் உள்ள 31 என்ஐடிக்களில் திருச்சி முதலிடத்தை மீண்டும் தக்க வைத்துக்கொண்டது.

Rashinee album

அனைத்து பொறியியல் கல்வி நிறுவனகளில், ஒரு இடம் முன்னேறி 10வது இடத்தில் உள்ளது. முதல் 10 இடங்களில் உள்ள ஒரே ஒரு தேசிய தொழில்நுட்பக் கழகமாக விளங்குகிறது. கட்டிட நுண்கலையியல் துறையில் நாட்டின் 7வது இடத்தைப் பெறுகிறது. மேலாண்மைத் துறையில் நாட்டின் 17வது இடத்தைப் பெறுகிறது. கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் 34வது இடத்திலிருந்து 24வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கீழ்கண்ட சாதனைகளைச் செய்துள்ளது. மேலும் 4 விருதுகளை பெற்றது. இச்சாதனைகளை எட்டப் பங்காற்றிய அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களை நிறுவனத்தின் இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் பாராட்டினார். சென்னை ஐஐடி பொறியியல் நிறுவனங்களில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Ukr

Leave A Reply

Your email address will not be published.