திருச்சியில் 4 மாதங்களில் தடுத்து நிறுத்தப்பட்ட 49 குழந்தை திருமணங்கள்

0
Business trichy

முன்னேறிய மாநிலமாகக் கருதப்படும் தமிழகத்தின் நகர்ப்பகுதிகளிலும்கூட இன்றளவிலும் அதிக அளவில் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன.
1990கள் வரையிலும்கூடத் தமிழ்நாட்டின் பல மாநிலங்களில் பெண் சிசுக் கொலை மிகவும் பரவலாக இருந்தது. அரசு மற்றும் சமூக ஆர்வலர்களின் தொடர் முயற்சியால் இந்த அவலம் பெருமளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், பெண் குழந்தைகள் மீது இன்றும் பல்வேறு வன்முறைகளும் உரிமை மீறல்களும் நடத்தப்படுகின்றன என்பது மிகவும் கவலையளிக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல; தேசிய அளவிலும் இதே நிலைதான்.

 

2018 செப்டம்பர் மாதம் குழந்தைகளின் உரிமைகளைக் காப்பதற்கான தேசிய ஆணையம் (National Commission for Protection of Child Rights – NCPCR) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. நாட்டில் நடக்கும் மொத்த திருமணங்களில் குழந்தைத் திருமணங்களின் பங்கு 2005-06ஆம் ஆண்டு 26.5 விழுக்காடாக இருந்தது; அது 2015-16ஆம் ஆண்டில் 11.9 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க முன்னேற்றம் என்றாலும், மேலும் 12 மாநிலங்களில் இதன் பங்கு தேசிய சராசரியைவிட அதிகமாக இருக்கிறது.

 

MDMK

15 – 19 வயதுப் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் போக்கு ஊரகப் பகுதிகளில்தான் அதிகமாக இருக்கிறது. ஆனால், நகர்ப்புறங்களிலும் பெண் குழந்தைத் திருமணம் என்பது பரவலாகவே உள்ளது. இந்தியாவின் பெரிய மாநிலங்களை எடுத்துக்கொண்டால், இதில் ஹரியானாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது தமிழகமே. முன்னேறிய மாநிலமாகக் கருதப்படும் தமிழ்நாட்டில் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் கிட்டத்தட்ட 37 விழுக்காடு நகரங்களில்தான் நடக்கிறது.
தமிழ்நாட்டில் இந்த அவலத்தைப்பற்றி போதிய ஆதாரங்கள் திரட்டுவதற்காகத் தமிழக அரசின் சமூகநலத் துறை, UNICEF மற்றும் Indian Council for Child Welfare எனும் நிறுவனங்களோடு இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 2018 டிசம்பர் மாதம் இந்த ஆய்வின் முக்கியக் கண்டுபிடிப்புகள் பொதுவெளியில் வைக்கப்பட்டன.

 

Kavi furniture

பெண் பிள்ளைகள் காதலில் இருப்பதாகத் தெரிந்தவுடன் அதைத் தடுப்பதற்காகவே அவர்களுக்குத் திருமணம் செய்துவைப்பதாகப் பெரும்பான்மையான பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோல நடத்தப்படும் குழந்தைத் திருமணங்களில் பெண்ணின் சம்மதத்தைப் பெறுவது அவசியம் என்று கருதும் பெற்றோர்களின் பங்கு 50 விழுக்காட்டுக்கும் குறைவு.
பொருளாதாரக் கஷ்டங்கள் காரணமாகப் பெண் பிள்ளைகளுக்கு அவர்கள் திருமண வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து வைப்பதாகத் தெரிவித்த பெற்றோர்களின் பங்கும் அதிகம். சமூகம், அரசியல், பொருளாதாரம் என அனைத்து தளங்களிலும் பாலினப் பாகுபாடுகளைப் பெண்கள் அன்றாடம் சந்திக்க வேண்டியிருக்கிறது. அதையும் தாண்டியே பெண்கள் பல துறைகளில் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வளர்ச்சிக்கு இளம் வயதிலேயே முட்டுக்கட்டை போடும் குழந்தைத் திருமணங்களை அறவே தடுத்து நிறுத்துவது அரசின் கடமை, சமுதாயத்தின் பொறுப்பு.

 

திருச்சியில் மாவட்ட சமூக நல அலுவலகமும் திருச்சி சைல்டு லைன் அமைப்பும் இணைந்து கடந்த 4 மாதங்களில் 49 குழந்தை திருமணங் களை தடுத்து நிறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய திருமணங்களை ஊக்குவிக்கும் நபர்கள் சமூகத்தில் எப்படிப்பட்ட அதிகாரவட்டத்தை உடையவராக இருந்தாலும் நாங்கள் அதை பொருட்படுத்துவதில்லை என்கின்றனர் இந்த அமைப்பினர்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.