திருச்சியில் தொடரும் சீட்டு மோசடி, கண்டுக்கொள்ளுமா காவல்துறை….

0
Business trichy

திருச்சியில் தொடரும் சீட்டு மோசடி, கண்டுக்கொள்ளுமா காவல்துறை….

சீட்டு கட்டி மோசடி செய்யும் கும்பல் திசைக்கொன்று நாளுக்கு நாள் திருச்சியில் முளைத்துக் கொண்டே தான் தான் செல்கின்றது. அந்த வகையில் திருச்சி மக்களிடம் பணத்தை மொத்தமாக சுரண்டிய நிறுவனமான திரிபுரா, பிஏசிஎல் , மற்றும் சமீபத்தில் புதிய தெய்வீக அன்பின் தொண்டு நிறுவனம் என்ற பல சீட்டு நிறுவனங்கள் குறிப்பாக திருச்சி மக்களை குறி வைத்து ஏமாற்றியது காவல்துறைக்கு தெரிந்ததே. அந்தவகையில்,

MDMK

திருச்சி உறையூரை சேர்ந்தவர் தங்கம். அவர் ஸ்ரீ அம்மன் என்டெர்பிரைஸ்ஸ் என்ற பெயரில் தீபாவளி சீட்டு, ஏலசீட்டு, மாதாந்திர சிறு சேமிப்பு திட்டம், தீபாவளி தங்க நகை சிறப்பு சேமிப்பு திட்டம் என பல வகையான சீட்டு நடத்தி வந்தார்.

Kavi furniture

அவர் நடத்தி வந்த ஏலசீட்டு மூலம் ரூ.2.5 கோடியை வசூலித்து திருப்பி தராமல் ஏமாற்றி விட்டதாக சகாயராஜ் என்பவர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்த நிலையில் தங்கம் தலைமறைவானார். மேலும் அம்மன் என்டெர்பிரைஸ்ஸ் மூலம் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களுடன் நேரில் வந்து புகார் செய்யலாம். என போலீசார் அறிவித்துள்ளனர்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.