சிறுபான்மையினர் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது

0
Full Page

சிறுபான்மையினர் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான அமமுக வேட்பாளர் புவனேஷ்வரனை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் வகையில் டிடிவி தினகரன் தீவிர பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய தினகரன், “கடந்த மார்ச் மாதம் நாங்கள் தூத்துக்குடி வந்தபோது சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தூத்துக்குடி நகரம், தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடே சோகத்தில் ஆழ்ந்தது. அறவழியில் போராடிய மக்களில் 13 பேரை கொடூரமாக சுட்டுக்கொன்றனர். நியாயமாக அமைதிவழியில் போராடியவர்கள் ஏதோ சமூக விரோதிகள் போலவும் தீவிரவாதிகள் போலவும் சித்தரிக்கப்பட்டனர்.
அன்றைக்கு 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டபோதுகூட திரும்பிப்பார்க்காத மோடி இன்றைக்கு தேர்தலுக்காக வருகிறார். எடப்பாடி பழனிசாமியோ கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் இன்று தூத்துக்குடி மக்களை சந்தித்து வாக்கு கேட்கிறார்.

Half page

அமித்ஷாவோ இந்தி படத்தின் வில்லன் போல இங்கு வந்து பேசிக்கொண்டிருக்கிறார்.
இவர்களெல்லாம் 13 பேர் சுட்டுக்கொல்லப் பட்டது பற்றி ஏதாவது பேசினார்களா? காரணம், இவர்களெல்லாம் வேதாந்தா குடும்பத்தின் எடுபிடிகள்.

இனி தமிழ்நாட்டிற்கு தாமிர ஆலையே தேவையில்லை என்ற கொள்கை முடிவை எடுத்தால்தான் இவர்கள் சட்டத்தின் ஓட்டை வழியே புகுந்துவிடமாட்டார்கள் என பலமுறை சொல்லி வருகிறேன்.
சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை திமுக முற்றிலும் இழந்துவிட்டதால், வரும் தேர்தலில் இந்துக்களின் ஆதரவை நாடும் நாடகத்தை மு.க.ஸ்டாலின் அரங்கேற்றி வருகிறார். சிறுபான்மையினர் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது” என்று பேசினார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.