கருப்பு பணத்தை மீட்டார்களா ? ரூ15,00,000 வங்கிக் கணக்கில் போட்டார்களா? திருச்சியில் சி ஆர் சரஸ்வதி பேச்சு!

0
gif 1

கருப்பு பணத்தை மீட்டார்களா ?
ரூ15,00,000 வங்கிக் கணக்கில் போட்டார்களா?

திருச்சியில்
சி ஆர் சரஸ்வதி பேச்சு!

gif 4

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமானை ஆதரித்து சி ஆர் சரஸ்வதி தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொண்டார்

gif 3

கடந்த தேர்தலில் என்ன சொல்லி வாக்குக் கேட்டார்கள். கருப்பு பணத்தை ஒழிப்பேன் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும்
ரூ15 லட்சம் போடுவோம் என்றார்கள் அப்படி செய்தார்களா ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்றார்கள் .இதுவரை எவ்வளவு பேர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து உள்ளார்கள். தற்பொழுது தேர்தலில் வாக்களியுங்கள் செய்கின்றோம் என்கிறார்கள். ஏற்கனவே வாக்களித்ததற்கு என்ன செய்தார்கள். முட்டி போட்டு முதலமைச்சரான ஈபிஎஸ் ஓபிஎஸ் உடன் சேர்ந்து கொண்டு அடிமை அரசாக செயல்படுகிறார்கள்.

 

அம்மாவை நாக்கு துருத்தி பேசியவர்களுடன் சமாதிக்கு இடம் கொடுக்கக்கூடாது என்று கூறியவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு துரோகம் செய்கின்றார்கள். இவர்களை அம்மாவின் ஆன்மா சும்மா விடாது. அம்மாவின் படத்தை கொடியில் வைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார் வாக்காளப் பெருமக்கள் அனைவரும் பரிசுப்பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொண்டார். அவைத் தலைவர் ராமலிங்கம் பகுதி செயலாளர் தன்சிங் மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட மாநகர பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.