2019 – ஆம் ஆண்டுக்கு காந்தி அமைதி பரிசு பெற

0
Business trichy

இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், நாட்டிற்கு பெருமை தேடித் தரும் வகையில் காந்திய வழியினை பின்பற்றி தொண்டு புரிந்து வரும் தனிநபர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு காந்தி அமைதி பரிசு வழங்கி வருகிறது. அதன்படி, இந்திய அரசின் சார்பில் 2019 ஆம் ஆண்டிற்கான  காந்தி அமைதி பரிசு பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

 

இந்திய அரசு மகாத்மா காந்தியின் 125 வது பிறந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘காந்தி அமைதி பரிசு’ ஒன்றினை மகாத்மா காந்திக்கு அவரது கொள்கைகளை நினைவு கூறும் வகையில்  அவருக்கு புகழஞ்சலி செலுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பரிசு கௌரவமான விருது என்றும் ரூ.1.00 கோடியும், வாழ்த்து மடலும் உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு வருடமும் பிரதமமந்திரியை தலைமையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள தேர்வாளரால் விருது பெறுபவர் தேர்ந்து எடுக்கப்படுவர்.

 

இந்த விருது தனி நபருக்கோ, நிறுவனங்களுக்கோ, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்ததங்களுக்கு அகிம்சை  முறையில் பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் காந்திய வழியில், மனித துயரங்களை அகற்றுவதற்கும் முக்கியமாக சமூகத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவை   சார்ந்த மக்களுக்கும், சமூக நிதி மற்றும் இனக்கமான நிலையை ஏற்படுத்துபவர்களுக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது தேசிய இனம், மொழி, ஜாதி, பாலினம் போன்றவற்றிற்கு அப்பாற்பட்டு வழங்கப்படுகிறது.

Full Page

கடந்த 10 ஆண்டுகளில் எழுதி பிரசுரிக்கப்பட்டுள்ள நூல் படைப்பாளர்கள் இவ்விருதுகளைப் பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள். சாதாரணமாக போட்டியில் கலந்து கொள்வதற்கு 10 ஆண்டுகளுக்கு  முன்னர் புத்தகங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்க வேண்டும். பழைய நூல்களும்  பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் அவற்றின் முக்கியத்துவம் சமீப காலங்களில் உணரப்பட்டிருக்க வேண்டும்.

இந்த விருதிற்கு பிரசித்திப்பெற்ற மனிதர்கள் மற்றும் நிறுவனங்களில் இது போன்ற விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விருதிற்கு மிகவும் பொருத்தமுடைய தகுதியுடையவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது கூடுதல் மற்றும் சிறப்பு தகுதிகளை குறிப்பிடுவதற்கு ஏதுவாக கூடுதல்  தாள்களை இணைத்துக்  கொள்ளலாம்.

 

இவ்விருத்திற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களை  இணையதள முகவரி www.indiaculture.nic.in–  லிருந்து பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம். தகுதியுள்ள தனிநபர்  மற்றும் தொண்டு நிறுவனங்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும்  25.04.2019-க்குள் திருச்சிராப்பள்ளி மாவட்ட விளையாட்டு மற்றும்  இளைஞர் நலன்  அலுவலர் அவர்களிடம்  சமர்பிக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு. தெரிவித்துள்ளார்கள்.

Half page

Leave A Reply

Your email address will not be published.