வீர தீரச் செயல்கள் புரிந்தமைக்காக “அசோக சக்ரா வீர தீர விருதுகள்”

0
Business trichy

நமது நாட்டின் வீர தீரச் செயல் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் அசோக சக்ரா விருதுகளுக்கான விண்ணப்பங்கள் இந்திய அரசால் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுகள் 3 பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.

அவையாவது, அசோக சக்ரா விருது (தன்னிகரற்ற தியாகம் புரிந்தவர்கள்), கீர்த்தி சக்ரா விருது (பகட்டான வீரத்துடன் போரடியவர்கள்) மற்றும் ஷவர்ய சக்ரா விருது (வீரத்துடன் போராடியவர்கள்) ஆகும்.

MDMK

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின நிகழ்வின்போது இந்திய அரசு இவ்விருதுகளை வழங்குகிறது. ராணுவத்தினர், பொதுமக்கள், காவல் துறையினர், மத்திய ஆயுதப்படை வீரர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் ஆகியோர் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். பல்வேறு நிகழ்வுகளான இயற்கை பேரழிவுகள், விபத்து, நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், தீ விபத்துக்கள், தீவிரவாத தாக்குதல், திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுத்தவர்கள் ஆகியோருக்கு வீர தீர செயல்கள் புரிந்தமைக்காக அசோக சக்ரா வீர தீர விருதுகளை பல்வேறு பிரிவுகளில் இந்திய அரசு வழங்கி வருகிறது.

Kavi furniture

அதன்படி, 2019 ஆம் ஆண்டிற்கான அசோக சக்ரா வீர தீர விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விபரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.inமூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2019 ஆம் ஆண்டிற்கான அசோக சக்ரா வீர தீர விருதிற்கான விண்ணப்பம் என குறிப்பிட்டு விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுப்பினர்-செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116-ஏ, ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நேருபூங்கா, சென்னை – 600 084 என்ற முகவரிக்கு எதிர்வரும் 25.04.2019-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.