திருச்சியில் போலீசார் தபால் வாக்குப்பதிவு.

0
Business trichy

திருச்சியில் போலீசார் தபால் வாக்குப்பதிவு.

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பணியாற்ற இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போடும் பணி தொடங்கியது. தேர்தல் பணியில் ஈடுபடும் திருச்சி மாநகரத்தை சேர்ந்த 1,720 போலீசார் வாக்குப்பதிவு செய்ய இருந்தனர். முதல் நாளான நேற்று 1,481 பேர் தங்களது தபால் வாக்குப்பதிவை செலுத்தினார்கள். இதற்காக திருச்சி கலையரங்க மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

web designer

தபால் வாக்குகளை செலுத்த வந்த போலீசார் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் காவல்துறை அடையாள அட்டையுடன் வந்து தபால் வாக்குசீட்டை பெற்று அரசு அதிகாரியிடம் கையொப்பம் பெற வேண்டும். பின்னர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த மறைவான இடத்தில் வாக்கினை செலுத்தி அங்குள்ள பெட்டியில் போட வேண்டும். இதற்காக பெரிய பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. ஆண் போலீசார் ஒரு வரிசையிலும், பெண் போலீசார் ஒரு வரிசையிலும் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். தபால் வாக்குப்பதிவை மாவட்ட கலெக்டர் சிவராசு பார்வையிட்டார்.

loan point

இது குறித்து அவர் கூறுகையில், “தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு பதிவு செய்து வருகிறார்கள். மாநகர பகுதியில் 1,720 பேரும், புறநகர் பகுதியில் 1,038 பேரும் என மொத்தம் 2,758 பேர் தபால் வாக்குப்பதிவு செய் கிறார்கள்” என்றார். புறநகர் பகுதியை சேர்ந்த போலீசார் இன்று (வியாழக்கிழமை) தபால் வாக்கு பதிவு செய்கிறார்கள். வெளியூரை சேர்ந்த போலீசாருக்கு உரிய படிவம் பெற்று அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் களுக்கு அனுப்பி வைக்கப் படும்” என்றார்.

nammalvar

இதேபோல் வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் இ.வி.எம். வாக்குச்சீட்டு, வேட்பாளரின் பெயர், கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை அடங்கி இருக்கும் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி இன்று நடக்கிறது. திருச்சி கிழக்கு தொகுதிக்கு மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்திலும், மேலும், 5 தொகுதிகளுக்கு அந்தந்த தாலுகா அலுவலகத்திலும் கட்சி சின்னங்கள் பொருத்தும் பணி நடக்கிறது.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.