டிடிவி தினகரனுக்கு கூடும் பெண்கள் கூட்டம்

0
1

டிடிவி தினகரனுக்கு கூடும் பெண்கள் கூட்டம்

4

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் பெண்கள் பூர்ண கும்ப மரியாதையுடன் கூட்டம் கூட்டமாய் வருகிறார்கள். டிடிவி தினகரன் பெண்கள் அதிகளவில் கூடுவது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது .
2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 3 பெண் வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பெண் வேட்பாளராக திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு சாருபாலா தொண்டைமான் நாகப்பட்டினத்தில் செங்கொடி தென்காசி (தனி)பொன்னுத்தாயி ஆகிய மூன்று பெண்கள் களம் இறங்குகிறார்கள் பெண் வேட்பாளர்களிடம் கூட்டம் கூடுவது குறித்து கேட்கையில் பெண்கள் நலனில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நல்ல திட்டங்களை வகுத்துள்ளது.
அதில் கிராமப்புற மகளிருக்கு 50,000 முதல் 2,00,000 ரூபாய் வரை வணிககடன்.
ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு இலவச அத்தியாவசிய பொருட்கள்.
பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்க உரிய சட்ட திருத்தம்‌.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு.
மாணவியர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள் .
மாணவிகளுக்கு இலவச சேனிட்டரி நேப்கின்கள் வழங்கப்படும்.
விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்கமாட்டோம் விவசாய கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை .

அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கும்
வைபை கணினி தர நடவடிக்கை.
முதியோர் உதவி தொகை உயர்த்த நடவடிக்கை .
நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல் செயல்படுத்துவதால் பெண்கள் கூட்டம் கூடுகின்றது என்றார்கள். மேலும் வாக்காளப் பெருமக்கள் வருகின்ற பதினெட்டாம் தேதி வெற்றிச் சின்னமாம் பரிசு பெட்டகத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்கின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.