சிறந்த  விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

0
Business trichy

 

MDMK

விளையாட்டுத் துறையில் நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டில் தொடர்புடையவர்களுக்கு (Sports Administrators)பல்வேறு விருதுகளை இந்திய அரசு ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.  அதன்படி, 2019 ஆம் ஆண்டிற்கான அர்ஜூனா விருது, ராஜுவ்காந்தி கேல் ரத்னா விருது, ராஷ்டிரிய கேல் ப்ரோட்சஹான் புரஸ்கார் விருது, துரோணாச்சாரியா விருது, மற்றும் தயான் சந்த் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அர்ஜூனா விருது, ராஜுவ்காந்தி கேல் ரத்னா விருது, ராஷ்டிரிய கேல் ப்ரோட்சஹான் புரஸ்கார் விருது இளம் வயதில் சாதனை புரிந்தவர்கள், விளையாட்டுக்களை ஊக்குவிப்பதுடன் விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியவர்கள்,  விளையாட்டு கட்டமைப்பில் விளையாட்டுப் போட்டிகளை தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் நடத்தியவர்களுக்கு வழங்கப்படும்.  துரோணாச்சாரியா விருது இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் வீரர்கள்,  வீராங்கனைகளை உருவாக்கிய பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும்.  தயான்சந்த் விருது தலைச்சிறந்த விளையாட்டு வீரராகவும், தலைமை பண்பு மிக்கவராகவும்,   விளையாட்டிற்கான அர்ப்பணிப்பவராகவும், சிறந்த ஒழுக்கமுடையவராகவும் இருப்பவர்களுக்கு வழங்கப்படும்.  இவ்விருதுகளுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விபரங்களை   தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  அர்ஜூனா விருது,  ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருது,  ராஷ்டிரிய கேல் ப்ரோட்சஹான் புரஸ்கார் விருது,  துரோணாச்சாரியா விருது  மற்றும் தயான் சந்த் விருது (Arjuna Award,  Rajiv Gandhi khel  Ratne Award,   Rashtriya Khel Protsahan Puruskar Award,  Dronacharya Award  and   Dhyan Chand Award) விண்ணப்பங்கள் அடங்கிய  உறையின் மேல்   சம்பந்தப்பட்ட  விருதிற்கான    விண்ணப்பங்கள்  என குறிப்பிட்டு அனுப்ப  வேண்டும்.  பூர்த்தி  செய்யப்பட்ட    விண்ணப்பங்களை  உறுப்பினர்-செயலர்,  தமிழ்நாடு  விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,  116-ஏ,  ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நேருபூங்கா,   சென்னை- 600 084 என்ற  முகவரிக்கு  எதிர்வரும்  25.04.2019-க்குள் அனுப்பி வைக்க  வேண்டுமென  மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.