சாதி சான்றிதழ் வழங்காததால் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்காமல் அவதிபடும் மக்கள்

0

சாதி சான்றிதழ் வழங்காததால் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்காமல் அவதிபடும் காட்டுநாயக்க பழங்குடியின மக்கள் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திருச்சிமாவட்டம் தொட்டியம் தாலுகா அரங்கூரை சேர்ந்த இந்து காட்டு நாயக்கன் நலசங்க தலைவர் வெங்கடேசன் தலைமையில் 50க்கும் மேற்ப்பட்டோர் திருச்சி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு ஆட்சியரின் நேர்முக உதவியாளர்  (பொது) சிவருத்ரய்யாவிடம் அளித்த மனுவில் செல்லப்பட்டதாவது.

தொட்டியம் தாலுகா அரங்கூரை சேர்ந்த இந்து காட்டு நாயக்கன் சமூகத்தை சேர்ந்த 2000க்கும் மேற்ப்பட்டோர் வசிக்கின்றோம். சில ஆண்டுகளுக்கு முன்பு சில அதிகாரிகளின் தவறுதலாக எங்களை கம்மாள நாயக்கர், ராஜ கம்மள நாயக்கர் என பல்வேறு இனங்களில் சேர்த்து சாதி சான்றிதல் வழங்கியுள்ளனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி பழங்குடியின இந்து காட்டு நாயக்கன் என சான்றிதழ் வழங்க கோரிக்கை விடுத்தோம்.

food

அதன்படி எங்கள் கிராமத்து வி.ஏ.ஓ, வருவாய் ஆய்வாளர், தாசில்தார், முசிறி ஆர்.டி.ஓ ஆகியோர் நேரடியாக வந்து விசாரணை நடத்தி, எங்களின் உறவினர்களையும், ரத்த சம்பந்தம் உள்ளவர்களையும், விசாரித்தனர். 2 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை இதனால் எங்கள் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்காமல் அவதிபடும் நிலை உருவாகியுள்ளது. மாவட்ட ஆட்சியர் எங்களுக்கு பழங்குடியின இந்து காட்டு நாயக்கன் என சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சங்க தலைவர் வெங்கடேசன் கூறுகையில் மலைக்காடுகளில் வசித்து வந்த எங்கள் இன மக்கள் வனப்பாதுகாப்பு சட்டத்தால் அங்கிருந்து விரட்டப்பட்டோம். நாடோடிகளாக வாழ்ந்த நாங்கள் குடுகுடுப்பை குறி சொல்வது, ஜோசியம் பார்ப்பது, வேட்டையாடுவது என பிழைப்பு நடத்தி வந்தோம். 30 ஆண்டுகளுக்கு முன் அதிகாரிகள் தவறுதலாக வேறு வேறு சாதியில் சேர்த்து சான்றிதழ் வழங்கினர். இதை மாற்றித்தர பல்வேறு கோரிக்கை விடுத்து பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தப்பட்டது. சமீபத்தில் மணப்பாறை சமூத்திரத்தில் 200 பேருக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. எங்கள் சாதியில் சான்று இல்லாததால் எங்கள் உறவினர்களே எங்கள் பிள்ளைகளை திருமணம் செய்ய மறுக்கின்றனர். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை மறுக்கப்படுகிறது.

எனவே உரிய சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.