என்.டி.டி. டேட்டா நிறுவனம் சார்பில் ஈஷா வித்யா பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

என்.டி.டி. டேட்டா (NTT DATA) நிறுவனம் சார்பில் கோவை மற்றும் தூத்துக்குடியில் செயல்படும் ஈஷா வித்யா பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
ஈஷா கல்வி அறக்கட்டளையானது தமிழகத்தில் கோவை, ஈரோடு, தர்மபுரி, கரூர், சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஈஷா வித்யா பள்ளிகளை நடத்தி வருகிறது.

இந்தப் பள்ளிகளில் (2018-19-ம் கல்வி ஆண்டில்) படிக்கும் மாணவர்களில் சுமார் 47 சதவீதம் பேர் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தப் பள்ளிகளில் 61 சதவீதத்துக்கு மேற்பட்டோருக்கு முழு கல்வி செலவும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ஈஷா வித்யா பள்ளிகளின் சிறப்பை உணர்ந்து, என்.டி.டி. டேட்டா நிறுவனம் கோவை மற்றும் தூத்துக்குடியில் செயல்படும் பள்ளிகளுக்கு மழலை கல்விக்கான உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், கலை மற்றும் ஓவிய உபகரணங்கள் மற்றும் அறிவியல் ஆய்வக உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது. கோவை சந்தேகவுண்டம்பாளையத்தில் உள்ள ஈஷா வித்யா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 2 பள்ளிகளுக்குமான கல்வி உபகரணங்களை அந்நிறுவன அதிகாரிகள் வழங்கினர்.
