பெண்கள் நலனில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நடன இயக்குனர் கலா மாஸ்டர் பிரச்சாரம்

0
1

பெண்கள் நலனில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

நடன இயக்குனர் கலா மாஸ்டர் பிரச்சாரம்

2

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் ஆதரித்து நடன இயக்குனர் கலா மாஸ்டர் தெருமுனை பிரச்சாரம் திருச்சியில் மேற்கொண்டார்

திருச்சி கீரைகடையில் நடன இயக்குனர் கலா மாஸ்டர் பேசுகையில், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த சின்னம் பரிசுப் பெட்டகம். பரிசுப்பெட்டகம் தான் இன்று சமூக வலைதளங்களில் ட்ரென்டிங் .அம்மா ஆசிர்வாதம் பெற்ற சின்னம்.

4

சாருபாலா தொண்டைமான் மண்ணின் மகள் அவர்களுக்கு பரிசு பெட்டகத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரை வெற்றி பெற செய்தால் கிராமப்புற மகளிருக்கு 50,000 முதல் 2,00,000 ரூபாய் வரை வணிககடன்.
ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு இலவச அத்தியாவசிய பொருட்கள்.
பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்க உரிய சட்ட திருத்தம்‌.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு.
மாணவியர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள் .

மாணவிகளுக்கு இலவச சேனிட்டரி நேப்கின்கள் வழங்கப்படும். விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்கமாட்டோம் விவசாய கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை .
அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கும்
வைபை கணினி தர நடவடிக்கை.
முதியோர் உதவி தொகை உயர்த்த நடவடிக்கை .

நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்படுத்தும் வாக்காளப் பெருமக்கள் வருகின்ற பதினெட்டாம் தேதி வெற்றிச் சின்னமாம் பரிசு பெட்டகத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்றார்.

பகுதி செயலாளர் முருகன் , மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் ,ராஜா உள்ளிட்ட மாநகர் பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்கள்

3

Leave A Reply

Your email address will not be published.