திருச்சி வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு எந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு.

0
Business trichy

திருச்சி வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு எந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. அதையொட்டி, தேர்தல் ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தீவிரமாக செய்து வருகிறார்கள். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஸ்ரீரங்கம், திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), திருவெறும்பூர், கந்தர்வக்கோட்டை(தனி), புதுக்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். இந்த 6 தொகுதிகளிலும் உள்ள 1,660 வாக்குச்சாவடி மையங்களுக்கு 3,993 வாக்குப்பதிவு எந்திரங்களும், 2,034 கட்டுப்பாட்டுக் எந்திரங்களும், வாக்களித்ததை உறுதி செய்யும் எந்திரம்(வி.வி.பேட்) ஆகியவற்றை இரண்டாம் கட்டமாக அனுப்புவதற்காக கனிணி முறையில் குலுக்கல் நடைபெற்றது. எந்தெந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எந்தெந்த வாக்குச்சாவடிக்கு அனுப்பப்படுகிறது? என்பது தொடர்பாக நேற்று கணினி முறையில் குலுக்கல் நடைபெற்றது. அதன்படி அந்தந்த வாக்குச்சாவடிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த குலுக்கல் முறை தேர்வு தேர்தல் பொது பார்வையாளர் அமித்குமார், தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான சிவராசு முன்னிலையில் நடந்தது.

பின்னர் கலெக்டர் சிவராசு கூறியதாவது:-

Image
Rashinee album

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் இரண்டாம் கட்ட கணினி குலுக்கல் முறையில் வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்குச் செல்லும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குச்சீட்டு, வேட்பாளரின் பெயர் மற்றும் புகைப்படம், கட்சியின் சின்னம் ஆகியவை அடங்கியிருக்கும்.

இவற்றை பொருத்தும் பணி நாளை (வியாழக் கிழமை) அன்று காலை 9 மணி அளவில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு தாசில்தார் அலுவலகத்திலும், திருச்சி (மேற்கு) சட்டமன்ற தொகுதிக்கு கண்டோன்மெண்ட் தாசில்தார் அலுவலகத்திலும், திருச்சி (கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்கு பாலக்கரையில் உள்ள மாநகராட்சிக்குட்பட்ட அரியமங்கலம் கோட்ட அலுவலகத்திலும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு திருவெறும்பூர் தாசில்தார் அலுவலகத்திலும், கந்தர்வக்கோட்டை (தனி) சட்டமன்ற தொகுதிக்கு கந்தர்வக்கோட்டை தாசில்தார் அலுவலகத்திலும், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவருத்ரய்யா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை தாசில்தார் பழனிதேவி, தேர்தல் தாசில்தார் முத்துசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.