சிறுபான்மையினர் ஏன் தினகரனை ஆதரிக்கின்றனர்

0
1

இந்திய சமூக ஜனநாயகக் கட்சியை (SDPI) பொறுத்தவரை கடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரனுடைய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவு கொடுத்திருந்தோம். அதன் அடிப்படையில் அத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். அதைத்தொடர்ந்து வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலிலும் எஸ் டி பி ஐ கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவு கொடுத்திருக்கிறோம். எஸ் டி பி ஐ -யின் திருச்சி மாவட்ட தலைவர் இமாம் ஹஸ்ஸான்.

ஆதரவுக்கான காரணம்;

ஆதரவுக்கான காரணம் என்று சொல்லும் பொழுது எஸ் டி பி ஐ -யை பொறுத்தவரைக்கும் ஒரு தனிநபரினுடைய தலைமை கிடையாது. அது எப்போதுமே ஒரு கூட்டுத் தலைமையுடைய முடிவுதான் எடுத்து நடைமுறைப்படுத்துவோம். அந்த அடிப்படையில் பல்வேறு மாநில செயற்குழுக்கள் மற்றும் பொது குழுக்கள் கூடி, கருத்துக்கணிப்பு மற்றும் ஆலோசனைகள் கேட்டதின் அடிப்படையில், பல்வேறு மாற்றங்களின் பொறுப்புத்தார்கள் இன்றைய காலக்கட்டத்தில் வலுவாக பாசிசத்தை எதிர்க்க கூடிய ஒரு அணி என்று பார்த்தால், அது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் தமிழகத்தை பொறுத்தவரை இருக்கின்றது என்ற பெரும்பான்மையான கருத்துக்கள் வந்ததன் அடிப்படையில் தான் எஸ் டி பி ஐ – யின் மாநில தலைமையானது அங்கீகரித்தது.

2
4

இன்று தமிழகத்தை பொறுத்தவரைக்கும் மத்தியில் இருக்க கூடிய பிஜேபி அரசாங்கத்தை எதிர்க்க கூடிய ஒரு அரசியல் கட்சி என்று பார்த்தால் திமுக -வை விட ,அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் டி டி வி தினகரன் வளர்ந்து வந்துள்ளார். குறிப்பாக அவருடைய அறிக்கை தான் எங்களுடைய நிலைப்பாடுகளுக்கான முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம். அந்த அறிக்கை என்னவென்றால் 20 ஆண்டுக்காலம் நான் சிறையில் இருந்தாலும் மீண்டும் வெளியே வந்து 21 வது ஆண்டு நான் பிஜேபி- யை எதிர்ப்பேன் என்று சொன்ன அறிக்கையாக இருக்கலாம் அல்லது என்னுடைய வாழ்நாளில் பிஜேபி- யுடன் எந்தவித கூட்டணியும் வைத்து கொள்ள மாட்டேன் என்று கூறியதெல்லாம் மிகப்பெரிய பாசிசத்தை எதிர்க்கக் கூடிய வார்த்தைகளாக நாம் பார்க்கின்றோம்.

பெரும்பான்மையான சிறுபான்மையினர் எதை விரும்புகிறார்கள் என்றால் தன்னுடைய பாதுகாப்பை விரும்புகின்றனர். அது இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, கிறிஸ்துவர்களாக இருக்கலாம், தலித்துக்களாக கூட இருக்கலாம் அப்படி இந்த சிறுபான்மை மக்கள் விரும்பக்கூடிய பாதுகாப்பு என்பது மத்தியில் ஆளக்கூடிய மோடியின் அரசாங்கத்திடமிருந்து கிடைக்காது என்ற அடிப்படையில் டிடிவி தினகரனை ஆதரித்துள்ளோம். எஸ் டி பி ஐ பொறுத்தவரைக்கும் காயிதே மில்லத்தின் அரசியலையும், தந்தை பெரியார் அரசியலையும் எடுத்து இந்தியா முழுவதும் வளம் வந்துக்கொண்டிருக்கின்றோம்.


எந்த ஒரு நிலையிலும் நம்முடைய சமூகத்தை அடகு வைத்து, நம்முடைய குறிப்பிட்ட சில நபர்களுடைய லாபத்திற்காக எந்த ஒரு முடிவும் நாம் எடுக்க முடியாது. இன்று ஒரு தார்மீக ஆதரவு கொடுக்கிறார்கள் என்றால் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் ஒரு சீட்டு கிடைச்சிடாதா என்ற பின் நோக்கம் தான் அவர்களுக்கு இருக்கின்றதே ஒழிய, இன்றைக்கு தங்களுடைய சுயமரியாதையை இழக்கின்றோம் என்ற சிந்தனைகள் அவர்களுக்கு இல்லை. அப்படிப்பட்ட நோக்கத்தினையுடைய திமுக மற்றும் மற்ற கட்சிகளுக்கும் தார்மீக ஆதரவு நாம் தரவேண்டிய அவசியமில்லை. அப்படி ஒரு கண்ணியமான கூட்டணியில் நாம் இணைய வேண்டும் என்ற நோக்கத்தில் டிடிவி-னுடைய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தோம்.

3

Leave A Reply

Your email address will not be published.