திருச்சி மேம்பாலங்களில் வளரும் ஆலமரம் அரசமரம்

0
Full Page

திருச்சி மேம்பாலங்களில் வளரும் ஆலமரம் அரசமரம்

மேம்பாலங்களில் வளரும் மரங்களை அகற்ற கோரிக்கை

ஸ்ரீரங்கம் மேம்பாலம்
Half page

திருச்சி மாநகராட்சி நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே வருகிறது. புறநகர் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. மாநகரின் வளர்ச்சியை போலவே, வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. டூவீலர், கார், வேன், டிராவலர்ஸ், பஸ், லாரி, டிரக் என, லட்சக்கணக்கான இலகு மற்றும் கனரக வாகனங்கள் திருச்சி நகருக்குள் பயணிக்கின்றன. வாகனங்கள் தங்குதடையின்றி செல்வதற்காகவும், எளிதில் பயணிக்கவும், திருச்சியில் பல்வேறு இடங்களில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

 

தென்னூர் மேம்பாலம்

அதில் தென்னூர் பிரதான சாலையில் இருந்து மதுரை சாலை வரை அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் ஒருதூணுக்கும், மற்றொரு தூணுக்கும் இடையே உள்ள இணைப்பில் அரச மரம் வளர்ந்து வருகிறது.
ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் அமைந்துள்ள மேம்பாலம் திருவானைக்காவல் சாலையை இணைப்பதற்கு போடப்பட்டுள்ளது மேம்பாலம் கீழே ரயில் போக்குவரத்து உள்ளது தற்போது மேம்பாலத்தின் பக்கவாட்டில் ஆல மரம் அரச மரம் வளர்ந்து வருகிறது மரம் பெரிதாக பெரிதாக காங்கிரீட் தளங்களில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது பொதுவாக மேம்பாலங்களின் இணைப்பு பழங்களுக்கு இடையே மரங்கள் வளர்கின்றது இதனால் பலம் பலவீனம் பட வாய்ப்புகள் உள்ளது பலகோடி செலவுகளில் அமைக்கப்பட்டுள்ள
மேம்பாலங்களில் பெரும் விரிசல் ஏற்படும் முன், அதை தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறையினர் எடுக்க வேண்டும்’ என, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.