ஸ்ரீரங்கம் மேம்பாலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம்.

0
Full Page

ஸ்ரீரங்கம் மேம்பாலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம்.

Half page

திருச்சி ஸ்ரீரங்கம் மேம்பாலத்தில் மரக்கன்றுகலால் பாலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருச்சியில் ரங்கத்தையும், திருவானைக்காவலையும் இணைக்கும் ரயில்வே மேம்பாலம் ரூ.11 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பாலத்தை முறையாக பராமரிக்கப்படாததால் தற்போது பாலத்தின் ஓரங்களில் பல இடங்களில் மரகக்ன்றுகள் வளர்ந்து தற்போது மரமாக உருவெடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால் பாலம் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால் மரக்கன்றுகள் மரமாக மாறும்போது பாலத்தில் விரிசல் ஏற்படும் சூழல் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரமுடன் உள்ள சென்டர் மீடியனை இடித்துவிட்டு மீண்டும் கட்டுவதாக பணத்தை வீணாக்கும் வேலையை பார்ப்பதில் காட்டும் ஆர்வத்தை பாலத்தை பராமரிப்பதில் காட்ட வேண்டும் என் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். நெடுஞ்சாலத்துறை அதிகாரிகள் உடனடியாக ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பாலத்தின் இருபுறமும் வளர்ந்துள்ள மரக்கன்றுகளை அப்புறப்படுத்தி பாலத்தின் உறுதித்தன்மையை நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.