வணக்கம் பிரேமலதா விஜய்காந்த் அவர்களுக்கு, ஒரு பெண்ணிற்கு பெண் எழுதும் திறந்த மடல்

0
Business trichy

வணக்கம் பிரேமலதா விஜய்காந்த் அவர்களுக்கு,

ஒரு பெண்ணிற்கு பெண் எழுதும் திறந்த மடல் இது .உங்கள் கணவர் திரைப்படத்தில் நடித்து சம்பாதித்த பணத்தை அரசியல் கட்சி துவங்க சொல்லி அதிகார பதவி ஆசையை அவர் மனதில் விதைத்து நீங்களும் உங்கள் தம்பியும் திரை மறைவில் நகர்த்திய காய்களை ஊர் அறியும் உலகறியும் .பத்து வருடங்களுக்கு முன்பு திமுக மீதும் அதிமுக மீதும் அதிருப்தியில் இருந்தவர்கள் குத்திய ஓட்டுகள் உங்கள் முரசு சின்னத்தில் வாக்களிக்க அதிர்ஷ்டவசமாக உங்கள் கணவர் எதிர்கட்சி தலைவர் ஆனார் .அதற்காக இந்த முறை உங்களை மற்ற கட்சிகள் தேடி வர வேண்டும் என்று புதிதாக பூப்படைந்த பெண் மாமன் சீருக்கு காத்திருப்பதுபோல் நீங்களும் உங்கள் தம்பியும் ஆடிய நாடகங்களால் அசிங்கப்பட்டதை நாடறியும் .

 

நாட்டை ஆள வேண்டிய இடத்தில் ஆட்டு வியாபாரிகள் துண்டை போட்டு பேரம் பேசும் நிலைக்கு கொண்டுவந்தீர்கள் . ” வந்தா வா வராட்டி போ ” என்று மற்ற கட்சிகள் ஏளனமாக சொல்லும் நிலைக்கு நீங்கள் இருந்தீர்கள் . எங்கேயும் போக முடியாமல் அனைவரும் கைவிட்ட நிலையில் அதிமுக விடம் மண்டியிட்டீர்கள் . “அழாதேடா தம்பி அக்கா நான் இருக்கேன்” என்று நீங்கள் உங்கள் தம்பியை வைத்து கொடுத்த பிரஸ் மீட்டில் நீங்கள் பத்திரிக்கை நண்பர்களை கேவலமாக ஒருமையில் பேசினீர்கள் .அங்கே நீங்களும் உங்கள் தம்பியும் பட்ட அவமானத்தை துடைக்க பேட்டி கொடுப்பதாக நினைத்து உங்கள் கோர முகத்தை காட்டி விட்டீர்கள் .

 

Kavi furniture

இரண்டு நாளில் நல்ல செய்தி சொல்கிறேன் என்று சொல்லி அதிமுக வுடன் இணைந்து நீங்கள் ஓபிஸ் உங்கள் தம்பி மற்றும் நாங்கள் கம்பீரமாய் பார்த்த கேப்டன் விஜய்காந்த் கண்ணாடி போட்டு வெகுளியாய் சிரித்துக் கொண்டு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவர் உங்களிடம் ஏதோ கேட்க வேண்டா வெறுப்பாய் நீங்கள் அவரிடம் விளக்க நினைத்த காட்சிகளை பார்த்தேன் .அத்தோடு இல்லாமல் உங்கள் அதிமுக கூட்டணி ஒப்பந்தம் முடிந்தவுடன் நீங்களும் உங்கள் தம்பியும் சென்று விட்டீர்கள் .தனியே அம்போவென அமர்ந்திருந்த உங்கள் கணவரை கண்டுகொள்ளாமல் சென்று விட்டீர்கள் .

 

பாவம் விஜய்காந்த் பல படங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை சுவற்றில் ஏறி ஒரே மிதி மிதித்தவர் . கோபத்தில் கண்கள் சிவந்து நரசிம்ம அவதாரம் எடுத்த அவரை உங்கள் காரியம் முடிந்தவுடன் விட்டு விட்டு போனீர்கள் .ஓபிஎஸ் அவர்கள் தான் இவரை யாராவது கூட்டிட்டு போங்கப்பா என்று சொன்னது அந்த பேட்டியை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி தான் .

 

MDMK

கட்டிய மனைவி செய்தது சரியா ? அந்தளவு உங்களுக்கு அரசியல் மோகம் .தற்போது கூட உங்கள் கணவரை பொம்மை போல் வைத்து அவர் பெயர் சொல்லி அரசியல் சதுரங்கம் விளையாடுகிறீர்கள் . பரவாயில்லை உங்களுக்கு வாய் சாமர்த்தியம் இருக்கிறது . ஆனால் இந்த நாக்கு நரம்பில்லாதது . அதனால் நீங்கள் என்ன வேண்டுமானலும் உளரலாம் என்று நினைக்காதீர்கள் .

“எத்தனை பாலியல் வன்கொடுமை நடந்தாலும் பரவாயில்லை அதிமுக கூட்டணி கட்சிக்கு வாக்களியுங்கள்” என்று நீங்கள் வாந்தி எடுத்திருக்கிறீர்கள் . வயது வித்தியாசம் பாராமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் பெண் குழந்தைகள் வாழ்வதற்கு ஏற்ற சமூகமாக இல்லாமல் ஆகிக் கொண்டு இருப்பதை பார்த்து பயந்து கொண்டு இருக்கிறோம் .பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் நெருப்போடு இருப்பது போல் இருக்கும் போது நீங்கள் கக்கிய விஷம் உங்கள் சுயத்தை நீ எல்லாம் பொம்பளை தானா என்று மற்றவர்கள் கேட்கும் விதமாக இருக்கிறது.

இரண்டு மகன்களை பெற்றதால் உங்களுக்கு நாங்கள் சொல்வது காதில் விழப்போவதில்லை புரியப்போவதும் இல்லை . ஆனால் ஒன்றை மட்டும் சொல்கிறேன் .

பெண் பிள்ளைகளை பெற்றவர்களின் ஓட்டு உங்களை போன்றவர்களின் கட்சிக்கு கிடையாது .

நன்றி:மேதா ஸ்ரீதர்

Pranav city

Leave A Reply

Your email address will not be published.