ராஜகோபுரத்தின் முன்னிருந்து ராஜ வம்சத்தினருக்கு வாக்கு கேட்கிறேன்

0
Business trichy

ராஜகோபுரத்தின் முன்னிருந்து ராஜ வம்சத்தினருக்கு வாக்கு கேட்கிறேன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து டி ஆர் சரஸ்வதி ஸ்ரீரங்கத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பேசுகையில், திமுக அதிமுகவிற்கு இல்லாத தில் டிடிவி தினகரனுக்கு உண்டு. கழகத் துணை பொதுச்செயலாளர் வீடு உறவினர்கள் வீட்டில் எல்லாம் வருமானவரித் துறையினர் சோதனையிட்டனர்.

 

MDMK

பல்வேறு நெருக்கடிக்கு ஆளானார்.அப்பொழுது என்னை 20 வருடம் சிறையில் அடைத்தாலும் 21 வது வருடம் எதிர்த்து நிற்பேன் என்று கூறினார். பதவிக்காக கூனிக்குறுகி காலில் விழும் துரோகிகள் முட்டிப் போட்டு முதலமைச்சர் ஆனவர்கள் எல்லாம் இன்று பேசுகின்றார்கள். இத்தேர்தல் துரோகத்திற்கும் தர்மத்திற்கும் நடைபெறும் தேர்தலாகும். திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளார்கள். இவர்கள் தொகுதி மக்களுக்கு என்ன செய்தார்கள்.

 

Kavi furniture

நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் இவர்கள். நாங்கள் பதவிக்கு அலையல பணத்துக்கு அலையல அதனால நாங்க அண்ணன் டிடிவி பக்கம் இருக்கின்றோம் ராஜகோபுரம் முன்பிருந்து ராஜவம்சத்தில் உள்ள சாருபாலா தொண்டைமானுக்காக பரிசு பெட்டகத்தில் வாக்கு சேகரித்து பேசுகின்றேன். ஆண்டவன் முன்பிருந்து பேசுகிறேன் .சிந்தித்துப் பாருங்கள் அம்மாவை சட்டசபையில் நாக்கு துருத்தி பேசியவர்கள் அம்மாவின் சமாதிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மானம் இருக்கா வெட்கம் இருக்கா தூன்னு துப்பல என்று கூறியவர்கள் கூட எல்லாம் கூட்டணி வைத்து விட்டு இப்பொழுது வாக்கு சேகரிக்க வருகின்றார்கள் .இது துரோகம் இல்லையா ஆண்டவனும் அம்மாவும் எங்க பக்கம் இருக்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள் என்று ராஜகோபுரம் முன்பிருந்து ராஜ வம்ச சாருபாலா தொண்டைமானுக்கு சரஸ்வதி பரப்புரை மேற்கொண்டார் பகுதி செயலாளர் இளையராஜா மகளிரணி செயலாளர் சித்ரா விஜயகுமார் ஒன்றிய செயலாளர் வாசு உட்பட பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்

Pranav city

Leave A Reply

Your email address will not be published.